3 ரூபாய் பேப்பர் பைக்காக 9000 ரூபாய் அபராதம் கட்டிய பேட்டா…

மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய சட்ட உதவி மையத்தின் கணக்கில் ரூபாய் 5000 செலுத்தவும் பேட்டா நிறுவனத்திற்கு உத்தரவு

By: April 15, 2019, 1:11:25 PM

JAGPREET SINGH SANDHU

Chandigarh Bata India Branch Pays Rs 9000 : சண்டிகர் மாநிலத்தில் வசிக்கும் தினேஷ் ப்ரசாத் ரத்தூரி என்பவர் பேட்டா நிறுவனத்தில் காலணிகள் வாங்கியுள்ளார். அதற்கு அவரிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டதோடு, பேப்பர் பைக்காக ரூ.3-ஐ வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் குறைதீர்ப்பு மையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார் ப்ரசாத்.

பிப்ரவரி மாதம் 5ம் தேதி, சண்டிகரில் உள்ள செக்டார் 22, பேட்டா கிளையில் ஒரு ஜோடி காலணிகளை வாங்கியுள்ளார். 399 ரூபாய் அதன் விலை. மேலும் பேப்பர் பைக்கு 3 ரூபாய் என மொத்தம் 402 ரூபாயை செலுத்தியுள்ளார் அவர். அந்த பேப்பர் பையில் பேட்டா என எழுதியிருந்தது. பிரசாத்திற்கு பை வாங்க வேண்டிய அவசியமே இல்லை.

மேலும் பொருட்கள் வாங்கினால் அதற்கான பையை தருவது அந்த நிறுவனத்தின் வேலை. வற்புறுத்தலின் பெயரில் பணம் கொடுத்து வாங்கப்பட்ட பையிலும் கூட பேட்டா நிறுவனத்தின் விளம்பரம்.

வாடிக்கையாளர்களின் பணத்தை பெற்றுக் கொண்டு இலவசமாக விளம்பரம் செய்து வருகின்றனர் என்று நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். இதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பேட்டா இந்தியா சுற்றுச்சூழல் ஆர்வலராக தன்னை முன்னிறுத்திக் கொண்ட ஒரு நிறுவனம்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் பேட்டா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே தான் இது போன்ற பைகளை வழங்க வேண்டுமே தவிர அதற்காக பணம் பெறுவதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

9 ஆயிரம் ரூபாய் அபராதம்

மேலும் இனி பேட்டா ஷோரூமில் வாங்கும் காலணிகளை பேக் செய்ய இலவச பேப்பர் பைகளை நாடு முழுவதும் தர வேண்டும் என்றும் கூறியுள்ளது.  மேலும் அந்த வாடிக்கையாளருக்கு 3000 ரூபாய் இழப்பீடாகவும், இந்த வழக்கிற்கான செலவு ரூ.1000த்தையும் அந்த வாடிக்கையாளருக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய சட்ட உதவி மையத்தின் கணக்கில் ரூபாய் 5000 செலுத்தவும் பேட்டா நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : சேதி தெரியுமா? கையால் தொட்டு பார்க்க 10 மில்லியன் டாலரை மொத்தமாக வங்கியில் இருந்து எடுத்த செல்வந்தர்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Chandigarh bata india branch pays rs 9000 for charging rs 3 for paper bag

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X