கொஞ்சம் தேன், கருப்பு எள், நெய்… இப்படி சப்பாத்தி செஞ்சா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!
chapati with honey simple steps to make in tamil: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் இந்த சப்பாத்தியில் சிறிதளவு தேன், கருப்பு எள், நெய் போன்றவற்றை கலந்து தயார் செய்தால் அவர்கள் இன்னும் விரும்புவார்கள்.
chapati recipe in tamil: தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக "சப்பாத்தி" உருவெடுத்துள்ளது என்றால் நிச்சயம் மிகையாது. ஊட்டச்சத்துக்க மிகுந்து காணப்படும் கோதுமையில் தயார் செய்யப்படும் சப்பாத்தியில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் நிரம்பி காணப்படுகின்றன. மேலும் இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருக்கவும் இவை உதவுகின்றன. தவிர, நீரிழிவு நோயாளிகளுக்கு சப்பாத்தி மிகவும் நல்லது.
Advertisment
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் இந்த சப்பாத்தியில் சிறிதளவு தேன், கருப்பு எள், நெய் போன்றவற்றை கலந்து தயார் செய்தால் அவர்கள் இன்னும் விரும்புவார்கள்.
சரி, இப்போது இந்த அருமையான சப்பாத்திக்கான சிம்பிள் செய்முறையை இங்கு பார்க்கலாம்.
ஹனி சப்பாத்தி செய்யத் தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப் வறுத்த கருப்பு எள் - 2 ஸ்பூன் தேன் - 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - சிறிதளவு நெய் - 4 டேபிள் ஸ்பூன் உப்பு - சுவைக்கேற்ப
சப்பாத்தி செய்முறை
ஹனி சப்பாத்தி தயார் செய்ய எப்போதும் சப்பாத்திக்கு மாவு பிசையும் பாணியையே பின்பற்றவும்.
நீங்கள் உப்பு சேர்க்கும் முன் தேன், கருப்பு எள் போன்றவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்தியை கல்லில் சுட்டு எடுக்கும் போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக்கொள்ளுங்கள். அல்லது நெய் - எண்ணெய் கலந்து கலவையை சப்பாத்திக்கு மேல் தடவி பிரட்டி எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த ஹனி சப்பாத்தி தயாராக இருக்கும். அவற்றை சாதாரணமாகவோ அல்லது குருமாவுடனோ சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“