scorecardresearch

ஒரே ஒரு உருளைக் கிழங்கு போதும்… சாஃப்ட் சப்பாத்தி சீக்ரெட் இதுதான்!

How to make soft Chapati in Tamil: சப்பாத்தி சூடாக இருப்பதை விட சாஃப்ட் ஆக இருந்தால் தான் சிலர் உண்ணவே முன்வருகிறார்கள்.

Chapati recipe in tamil: secret for soft chapati recipe in tamil

soft chapatis secret in tamil: நம்மில் பலர் விரும்பி உண்ணும் உணவுகளுள் ஒன்றாக சப்பாத்தி உள்ளது. இந்த அற்புதமான உணவு சூடாக இருப்பதை விட சாஃப்ட் ஆக இருந்தால் தான் சிலர் உண்ணவே முன்வருகிறார்கள். அப்படி சாஃப்டாக சுட நாம் முயலாலும் போது பல சமயங்களில் சொதப்பி விடுகிறோம். இப்படி நாம் சொதப்புவதற்கு முக்கிய காரணமாக சொதப்பலாக மாவு பிசைவதே ஆகும். அப்படி நாம் சொதப்பாமல் இருக்க ஈஸியான டிப்ஸ்யை இங்கு பார்க்கலாமா!

சாஃப்ட் சப்பாத்தி செய்முறை:-

நீங்கள் சப்பாத்தி மாவை ஒரு வேளை சொதப்பலாக பிசைந்து விட்டீர்கள் என்றால் அது பற்றிய கவலையை விடுங்க. நீங்கள் பிசைந்த மாவை அப்படியே வைத்து விட்டு, ஒரு உருளைக்கிழங்கை எடுத்து குக்கரில் போட்டு நன்றாக வேகவைத்து அதன் தோல்களை நீக்கி விட்டு நன்றாக மசித்து இந்த சப்பாத்தி மாவோடு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இப்போது பிசைந்த இந்த மாவில் மீண்டும் சப்பாத்தியை செய்து பாருங்கள். அவை நிச்சயம் சப்பாத்தி சாஃப்ட் ஆக வரும். அவற்றை உங்களுக்கு பிடித்தமான சைடிஷ்களுடன் ருசிக்கலாம்.

பின்குறிப்பு:-

இங்கு நீங்கள் எவ்வளவு மாவை பிசைந்து வைத்து இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு தேவையான உருளைக்கிழங்கை பயன்படுத்திக் கொள்ளவும்.

ஒரு கப் மாவு என்றால், ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு போதுமானது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Chapati recipe in tamil secret for soft chapati recipe in tamil