chapati recipe tamil: நம்மில் பெரும்பாலானோரால் விரும்பப்படும் உணவாக சப்பாத்தி இருக்கிறது. இதற்கு இவற்றில் காணப்படும் ஊட்டச்சத்துக்களை குறிப்பிட்டு கூறிவிடலாம். அந்த வகையில், இவற்றில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், தாதுக்களும் நிரம்பியுள்ளன.
இந்த அற்புதமான சப்பாத்தி இரத்தத்தில் சர்க்கரை அளவை ஒழுங்காக வைத்திருப்பதத்தால் நீரிழிவு நோயாளிகளுக்கு இவை மிகவும் நல்லது. இவற்றில் வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 நிறைந்துள்ளததோடு கோதுமையில் சோடியம் மிக அதிகமாக உள்ளது.
120 கிராம் கோதுமையில் 190 மில்லிகிராம் சோடியம் உள்ளது. நீங்கள் செய்யும் மிருதுவான சப்பாத்தியில் வெஜ் அல்லது நான் வெஜ் குருமா சேர்த்து சாப்பிடால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். தவிர, வயது முதிர்ந்தவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவு.
இப்படி பல ஆரோக்கிய நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ள சப்பாத்தியை எப்படி சாஃப்டாக தாயர் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

சாஃப்ட் சப்பாத்திக்கான சிம்பிள் ரகசியம்:
சாஃப்ட் சப்பாத்திக்கு முக்கிய ரகசிய பொருள் சர்க்கரை தான். நீங்கள் எப்போதும் சப்பாத்தி மாவு தயார் செய்யும்போது ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவும்.
இவற்றுடன், நெய் அல்லது எண்ணெய் சேர்த்து கலந்துகொள்ளவும். தேவைப்பட்டால் ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து பிசைந்துகொள்ளலாம். இவை சப்பாத்திக்கு நல்ல சுவையை தரும்.
மாவு பிசை தண்ணீர் சேர்க்கும் போது சுடு தண்ணீரை பயன்படுத்திக்கொள்ளவும்.

பின்னர், மாவை எப்போதும் போல் பிசைந்து உருண்டையாக உருட்டிக்கொள்ளவும்.
இவற்றுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஈரத்துணி போட்டு மூடிவைத்துவிடவும்.
பிறகு, காற்று குறைவாக உள்ள இடத்தில் வைத்து நன்றாக தேய்த்து கல்லை சூடுபடுத்தி போட்டு எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சாஃப்ட் சப்பாத்தி தயராக இருக்கும். அவற்றை உங்களுக்குப் பிடித்த சைடிஷ்களுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“