healthy food Tamil News: தற்போதைய நாட்களில் 'சப்பாத்தி' தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆகும். சப்பாத்தி செய்யப் பயன்படுத்தப்படும் கோதுமையில், வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 போன்றவை நிறைந்துள்ளன. அதோடு கோதுமையில் சோடியம் மிக அதிகமாக உள்ளது.
Advertisment
நாம் தயார் செய்யும் சாஃப்ட்டான சப்பாத்தியோடு வெஜ் அல்லது நான் - வெஜ் குருமா சேர்த்து சாப்பிடால் ரொம்பவே டேஸ்டியாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி உண்பார்கள்.
இத்தகைய சாஃப்ட் சப்பாத்தி செய்ய இங்கு சில முக்கிய டிப்ஸ்களை வழங்கியுள்ளோம். அவற்றை இப்போது பார்க்கலாம்.
Advertisment
Advertisements
சாஃப்ட் சப்பாத்தி செய்யத் தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 2 கப் உப்பு – தேவையான அளவு நெய் - 1/2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு
சாஃப்ட் சப்பாத்தி சிம்பிள் செய்முறை:
முதலில் ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் கோதுமை மாவை இடவும்.
தொடர்ந்து அவற்றுடன் தேவையான அளவு உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு, அவற்றுடன் தண்ணீர் சேர்த்து கையில் மாவு ஒட்டாத அளவிற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
மாவை ஒரு துணியால் மூடி சுமார் 15 நிமிடத்திற்கு அப்படியே விட்டுவிடவும்.
பிறகு எப்போதும் போல் மாவை சப்பாதிக்கென்று உருண்டை உருட்டவும்.
மாவு தேய்க்கும் போது ரொம்பவும் மெல்லிசாகவும், ரொம்பவும் கெட்டியாகவும் தேய்க்காமல் ஒரு நடுநிலையாக தேய்த்துக்கொள்ளவும்.
பிறகு மிதமான சூட்டில் கல்லை வைத்து சப்பாத்தியை இட்டு எடுத்துக்கொள்ளவும்.
இப்போது சாஃப்ட்டான சப்பாத்தி தயராக இருக்கும். இவற்றுடன் உங்களுக்கு பிடித்தமான குருமாக்களுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“