Chapati recipes in tamil: நம்மில் பெரும்பாலானோரால் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக சப்பாத்தி உள்ளது. ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள இந்த அற்புத உணவில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், தாதுக்களும் நிரம்பி காணப்படுகிறது. மேலும், இவற்றில் வைட்டமின் பி 1, பி 2, பி 2, பி 6 மற்றும் பி 9 நிறைந்துள்ளததோடு சோடியம் மிக அதிகமாக உள்ளது.
இந்த சப்பாத்திகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உட்கொள்ளப்படுகிறது. அப்படிப்பட்ட சப்பாத்திகளை சாஃப்ட்டாக தயாரிக்க சப்பாத்தி மாவு மிகவும் முக்கியம். எனவே, சப்பாத்தி தயார் செய்ய வைத்துள்ள மாவை எப்படி சேமிப்பது? ஒரு முறை தயார் செய்த மாவை எப்படி மீண்டும் பயன்படுவது? என்பதற்கான சில சிம்பிள் டிப்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
சப்பாத்தி மாவை நீண்ட நேரம் புதியதாக வைத்திருப்பது எப்படி?
சுவையான சப்பாத்திகளை தயார் செய்ய ஒவ்வொரு முறையும் புதிதாக சப்பாத்தி மாவை தயார் செய்யும் நிலை ஏற்படுகிறது. இது நமக்கு மேலும் அலுப்பைத்தான் தருகிறது. அதைச் செய்வதற்கான மிகவும் திறமையான வழி, ஒரு நாள் நீடிக்க போதுமான அளவு மாவை பிசைந்து வைத்துக்கொள்வது தான்.
இருப்பினும், மாவை 24 மணிநேரம் புதியதாக வைத்திருப்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கலாம். ஏனெனில் இந்த மாவு பூசலுக்கு ஆளாகிறது. மாவு சில நேரங்களில் சாம்பல் கலந்த கருப்பு நிறமாக மாறி விடுகிறது. இதனால், நமது முயற்சிகள் அனைத்தும் வீணாகிவிடுகிறது. கூடுதலாக, கெட்டுப்போன சப்பாத்தி மாவு உலர்ந்த மற்றும் தட்டையான சப்பாத்திகளை தருகிறது, அது சுவையாக இருக்காது.
ஆனால், நாம் தயார் செய்யும் மாவை சரியாக சேமித்து வைத்தால், அதை பயன்படுத்துவதற்கான நேரத்தை அதிகரிக்கலாம் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் அதை தயாரிக்க வேண்டியதில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
அவ்வாறு உறுதிபடுத்த நீங்கள் பின்பற்றக்கூடிய சில டிப்ஸ்களை இப்போது பார்ப்போம்.
- க்ளிங்-ஃபிலிம் அல்லது அலுமினிய ஃபாயில் பயன்படுத்தவும் (Cling-Film or Aluminium Foil)
நாம் சப்பாத்தி தயார் செய்வதற்கான மாவைப் பயன்படுத்தி முடித்த பிறகு, மீதமுள்ள மாவை ஒரு பாத்திரத்தில் அல்லது ஒரு கொள்கலனில் வைத்து குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு முன், அதை அலுமினியத் தகடு அல்லது சுத்தமான க்ளிங் ஃபிலிம் கொண்டு மூடி வைக்கலாம். இப்படி வைக்கவும் போது மாவை முழுமையாக மூடி, உள்ளே காற்று குமிழ்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- காற்று புகாத கொள்கலனை பயன்படுத்தவும்
சப்பாத்தி மாவை ஒரு ஜிப் லாக் பையில் அல்லது காற்று புகாத கொள்கலனில் அல்லது பாத்திரத்தில் சேமித்து வைக்கவும். குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு முன், கெட்டுப்போகாமல் தடுக்கவும்.
- மாவின் மேற்பரப்பை எண்ணெய்/நெய் கொண்டு மூடவும்
சப்பாத்தி தயார் செய்ய வைத்துள்ள மாவை கொள்கலனில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு முன், ஒரு மெல்லிய அடுக்கில் எண்ணெய் அல்லது நெய் கொண்டு தடவி அதை மூடி வைத்து கெட்டுப் போவதைத் தடுக்கலாம்.
இந்த எண்ணெய் பதம் சப்பாத்தி மாவு கருமையாக்குவதையும் உலர்த்துவதையும் தடுக்க உதவும். மேலும், நாம் தயார் செய்ய உள்ள சப்பாத்திகள் மென்மையாகவும் புதியதாகவும் இருக்கும்.
இது போன்ற எளிமையான வழிகளை பயன்படுத்தி சுவையான சாஃப்ட் சப்பாத்திகளை செய்து அசத்துங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.