காரசாரமான செட்டிநாடு கார சட்னி; இட்லியும் தோசையும் உடனே காலி…

Breakfast Chutney Recipe in tamil: காரசாரமான செட்டிநாடு கார சட்னி செய்வதற்கான எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்.

Chettinad Kaara Chutney Recipe in Tamil: Start your Breakfast with this Chutney Recipe

Chettinad Kaara Chutney Recipe in Tamil: தென்னிந்திய உணவு வகைகளில் செட்டிநாடு உணவு வகை மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இவற்றின் சுவையும், ருசியும் தனித்துமானதாக உள்ளது. இந்த அற்புதமான செட்டிநாடு உணவு வகைகளில் காலை வேளையில் செய்யப்படும் உணவுகள் அல்டிமேட் சுவையில் இருக்கும். அதிலும் இட்லி, தோசைகளுக்கு பரிமாறப்படும் சட்னிகளின் ருசியே தனி தான்.

இந்த டேஸ்ட்க்காகவே கணக்கில்லாமல் இட்லி, தோசைகளை உள்ளே தள்ளலாம். அப்படிப்பட்ட காரசாரமான செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

செட்டிநாடு காரா சட்னி செய்யத் தேவையான பொருட்கள்

வெங்காயம் (பெரிய அளவு) – 2
தக்காளி (பெரிய அளவு) – 3
உலர் சிவப்பு மிளகாய் – 15
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 15 – 20
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலைகள் – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – ஒரு பிஞ்ச்
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு
உப்பு – சுவைக்கேற்ப
நல்லெண்ணெய்

செய்முறை

காரசாரமான சட்னி செய்ய முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை சேர்த்து கிளறவும். பிறகு, வெங்காயம் சேர்த்து பாதி அளவு வெந்தவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியைச் சேர்க்கவும்.

பின்னர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு கிளறவும். தொடர்ந்து கொத்தமல்லி இலைகள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். அவை நன்கு வதங்கிய பிறகு, அவற்றை ஆற வைத்து ஒரு மிக்சியில் இட்டு அரைக்கவும். மிக்சியில் அரைக்கும்போது தேவையான அளவு தணண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

சட்னியை தாளிக்க

இப்போது ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு, கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். விரும்பினால் பெருங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.

அதன் பின்னர், முன்பு அரைத்து வைத்துள்ள சட்னி கலவையை அவற்றோடு சேர்த்து மிக்ஸ் செய்யவும் (பாத்திரத்தில் இருந்தவாறு). நன்கு மிக்ஸ் செய்து பிறகு காரசாரமான செட்டிநாடு கார சட்னி தயாராக இருக்கும். அவற்றை உங்கள் காலை உணவுகளுடன் பரிமாறினால் அசத்தலாக இருக்கும்.

நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாமே மக்களே!!!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chettinad kaara chutney recipe in tamil start your breakfast with this chutney recipe

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com