Pallipalayam chicken recipe in tamil: கோழிக்கறி சமையலில் பல வெரைட்டிஸ் உள்ளன. அவையனைத்தும் தனித்துவ டேஸ்ட்களுடன் சமைக்கப்படுகின்றன. இது தவிர தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாச வித்தியாசமான முறையில் சிக்கன் சமைக்கப்படுகின்றன. இவற்றில் சிக்கன் ப்ரைகளும், கிரேவிகளும் அடங்கும்.
அந்த வகையில் கொங்கு மண்டல பகுதிகளில் பிரபலமாக உள்ள பள்ளிபாளையம் சிக்கனும் ஒன்று. தனித்துவமான டேஸ்ட்யை கொண்டுள்ள இந்த சிக்கன் வெரைட்டியை தயார் செய்ய அதிக நேரம் தேவையில்லை. மேலும் இதற்கான செய்முறையும் ஈஸியாகும்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 350 கிராம்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
சில்லு சில்லாய் நறுக்கிய தேங்காய்
காய்ந்த மிளகாய் - 15 (விதை நீக்கப்பட்டது)
பூண்டு - 15
இஞ்சி - சிறிய துண்டு
சமையல் எண்ணெய் - 40 மில்லி
கடுகு - 1/4 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - 1 கொத்து
சின்ன வெங்காயம் - 200 கிராம்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் சுத்தமான தண்ணீரில் அலசிய சிக்கனை சேர்க்கவும். பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தனியாக ஊற வைக்கவும்.
அதன் பின்னர் ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை, விதை நீக்கிய காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும். பிறகு அவற்றோடு சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தட்டிய இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு சில்லு சில்லாய் நறுக்கி வைத்துள்ள தேங்காயை சேர்த்து அவை நன்றாக ரோஸ்ட் ஆகும் வரை கிளற வேண்டும். பின்னர் முன்பு ஊற வைத்துள்ள சிக்கனை அவற்றோடு சேர்த்து, தண்ணீர் ஊற்றி வேக வைக்காமல் தண்ணீரைத் தெளித்து வேக வைக்கவும். பிறகு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக ரோஸ்ட் பண்ணவும். எந்த அளவிற்கு நாம் ரோஸ்ட் செய்கிறோமே அந்த அளவிற்கு நமக்கான டேஸ்ட் கிடைக்கும்.
அவை நன்கு ரோஸ்ட் ஆனதும் அடுப்பில் இருந்து கீழே இறக்கி, உணவுகளுடனோ அல்லது சைடிஷ்ஷாகவோ உண்டு மகிழுங்கள்!!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“