chicken recipes in tamil: குழம்பு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக சிக்கன் குழம்பு உள்ளது. இதற்கு காரணமாக இவற்றில் சேர்க்கப்படும் மசாலாவை குறிப்பிட்டு கூறலாம். அந்த அளவிற்கு அவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தனித்துவமான சுவையை கொடுக்கின்றன.
Advertisment
சிக்கன் குழம்பில் பல வகைகள் உள்ள நிலையில், அந்த குழம்பில் மிளகு சேர்த்து காரசாரமான சிக்கன் மிளகு குழம்பு எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு காணலாம். இந்த அருமையான சிக்கன் மிளகு குழம்பை உங்களது விருப்பமான உணவுகளான இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி என அனைத்தோடும் சேர்த்து ருசிக்கலாம்.
சிக்கன் மிளகு குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்:-
சிக்கன் - 1/2 கிலோ மிளகு - 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் தனியா தூள் - 1 ஸ்பூன் மிளகாய் தூள் - 1 ஸ்பூன் வெங்காயம் - 1 வெண்ணெய் - 100 கிராம் கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவையான அளவு
Advertisment
Advertisements
சிக்கன் மிளகு குழம்பு செய்முறை:-
முதலில் சிக்கனை தண்ணீரில் இட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் இவற்றுடன் மிளகை நன்றாக தூள் செய்து கலந்து கொண்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
இப்போது சிக்கனை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். சிக்கன் கொதித்துகொண்டிருக்கும் போதே அதில் கலந்துவைத்துள்ள மசாலாவையும், உப்பையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட ஆரம்பிக்கவும்.
இதன் பிறகு, மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பிறகு அவற்றோடு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
தொடர்ந்து இவற்றை கொதிக்கும் குழம்பில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். இறுதியாக சிறிது மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் மிகவும் விரும்பிய சூப்பரான சிக்கன் மிளகு குழம்பு ரெடியாக இருக்கும். அவற்றை உங்களுக்கு விருப்பமான உணவுகளுடன் பரிமாறி ருசித்து மகிழவும்.