இந்த உணவுகளை உங்கள் பிள்ளைகள் தினமும் சாப்பிடுகிறார்களா?

வயிறு நிரம்பியவுடன் உணவு கொடுப்பதை நிறுத்தி விடுங்கள்.

குழந்தையால் எவ்வளவு சாப்பிட வேண்டும், என்னவெல்லாம் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று  அம்மாக்களும் பெரும் சந்தேகம் இருக்கும். உங்களின் சந்தேகத்திற்கு விடைக் கிடைக்கும் நேரம் இது. ஒவ்வொரு நாள் காலை வேளையும்  குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவு அத்தனை சத்துமிக்கதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு  ஊட்டச்சத்தும் கிடைக்கும்.

குறிப்பாக காலை உணவை சிறு வயதில் இருந்தே தவறாமல் கடைப்பிடிப்பது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியம். குழந்தைகளுக்கு உணவு ஊட்டுதல் என்பது அவர்களின் விருப்பத்தை பொறுத்து தான். நாம் அவர்கள் சாப்பிடும்  உணவுகளில் கலோரியின் அளவை கணக்கிட முடியுமா என்றால் நிச்சயம் கடினமான காரியம் தான்…

* காலை உணவில்,  பொங்கல், கிச்சடி போன்றனவும் கட்டாயம் இடம் பெற வேண்டிய ஒன்றே. இத்துடன் அவசியம் காய்கறிகள் கொண்ட சாம்பார், புதினா சட்னி, தேங்காய்ச் சட்னி ஏதேனும் ஒன்று இருக்கவேண்டும். இந்த உணவு வகைகளில் கார்போஹைட்ரேட்ஸ் அதிகம் இருப்பதால் ஈசியாக ஜீரணித்து, பசியைத் தூண்டக்கூடியது.

* பழங்களிலேயே வேறு எந்த பழத்துக்கும் இல்லாத சிறப்பு வாழைப்பழத்துக்கு உண்டு. ஆம் வாழைப்பழம் மட்டும் தான் எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடியது. அதோடு வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது

* காலையில் குழந்தைகள் டீ, காபி விரும்பி குடிக்கிறார்களே என்று தினமும் அவர்களுக்கு குடிக்கக் தரக்கூடாது. இவையெல்லாம் பசியை குறைப்பதோடு இதில் இருக்கும் அமிலத்தன்மையால் அல்சர் ஏற்படுத்த வாய்ப்புண்டு

*பீன்ஸ் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்த உணவுகளில் ஒன்று. அதிலும் குறிப்பாக, வெள்ளை நிற பீன்ஸ் விதைகளில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது.

*முட்டை விரும்பும் குழந்தைகளுக்கு வேகவைத்த முட்டை கொடுக்கலாம்.

*ரெட் வெண்ணெய் தடவி கொடுக்கலாம். அல்லது பழங்களான பப்பாளி, கொய்யா, வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை முத்துக்கள் போன்றவற்றை துண்டுகளாக்கி கொடுக்கலாம்.

*கீரையில் வெறுமனே வைட்டமின் ஏ மட்டும் இருக்கிறதென நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கீரையில் தாராளமாக பொட்டாசியம் கிடைக்கிறது.

உங்கள் குழந்தையின் வயிறு நிரம்பியவுடன் உணவு கொடுப்பதை நிறுத்தி விடுங்கள். டிவி பார்த்துக் கொண்டோ, வலுக்கட்டாயமாகவோ உணவை ஊட்டாதீர்கள். இது உங்கள் குழந்தையின் உணவு பழக்கத்தையே மாற்றிவிடும்…

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Lifestyle news in Tamil.

×Close
×Close