Chilli Bread Recipe Tamil News: சமையலில் குழந்தைகளிடம் பாராட்டு வாங்குவது மிகவும் கடினமான ஒன்று. அவர்களுக்காகவே தினமும் கிரியேட்டிவாகவும், ஆரோக்கியமாகவும் உணவை தயாரிக்க அம்மாக்கள் மெனக்கெடுவார்கள். அந்த வகையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி பிரெட் ரெசிப்பியை இங்கு பார்ப்போம்.
சரவண பவன் தேங்காய் சட்னி சீக்ரெட் தெரிஞ்சிக்கோங்க!
தேவையான பொருட்கள்
பிரெட் ஸ்லைஸ் - 10
தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி
சிவப்பு கேசரி கலர் - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
எலுமிச்சை ஜுஸ் - சிறிதளவு
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
வெங்காயம் - 2
தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் - 3
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
VIDEO
அவ்ளோ பயன்கள் இருக்கு… இதை தவிர்க்காதீங்க! அரைக் கீரைக் குழம்பு செய்முறை
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிரெட்டை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வாணலியில் நெய் விட்டு வறுத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் தக்காளி சாஸ், சிவப்பு கேசரி கலர், மிளகாய் தூள், கரம் மசாலா போட்டு வதக்கவும்.
பின்னர் வறுத்த பிரெட் துண்டுகளுடன், உப்பு போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை, எலுமிச்சை ஜுஸ், சிறிது வெங்காயம் சேர்த்து பரிமாறவும். இப்போது சூப்பரான சில்லி பிரெட் ரெடி.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”