chinna vengaya chutney in tamil: இட்லி தோசைகளுக்கு ஏற்ற "சைடிஷ்" சட்னி வகைகள் தான். அதிலும் குறிப்பாக சின்ன வெங்காய சட்னி அவற்றுக்கு பொருத்தமானவை. ஏனென்றால் இவற்றை தயார் செய்ய சில நிமிடங்கள் போதும். தவிர டேஸ்ட்டிலும் அருமையாக இருக்கும். இந்த சுவைமிகுந்த சட்னியோடு பூண்டு சிறிதளவு நாம் சேர்க்கும் போது அதன் சுவையே தனித்துவமாக அமைகிறது. பூண்டு பல வித ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
சரி, இப்போது சின்ன வெங்காயம் - பூண்டு சேர்த்த டேஸ்டி சட்னி எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
சின்ன வெங்காயம் - பூண்டு சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
அரைக்க:-
நல்லெண்ணெய் - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 15- 20
பூண்டு - 7- 8
காய்ந்த மிளகாய் - 5
காஸ்மீரி மிளகாய் - 2
கருவேப்பிலை - 1 கொத்து
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
புளி - சிறு நெல்லி அளவு
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:-
சிறிதளவு - நல்லெண்ணெய், கடுகு உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, பெருங்காய தூள்
சின்ன வெங்காயம் - பூண்டு சட்னி செய்முறை:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்தி அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தொடர்ந்து பூண்டு சேர்த்து வதக்கவும். இவை இரண்டும் நன்கு வதங்கியதும் காய்ந்த மிளகாய் மற்றும் காஸ்மீரி மிளகாய் சேர்த்து வதக்கவும். மேலும் கருவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
தக்காளியை அதன் மேல் பகுதியை மட்டும் நீக்கி விட்டு தனியாக பாத்திரத்தில் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
இவை ஆறிய பின்னர் ஒரு மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். பின்னர் தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு பாத்திரத்தில் இட்டு தாளித்து இவற்றுடன் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது உங்களுக்கு பிடித்த இட்லி, தோசைகளுடன் சின்ன வெங்காயம் - பூண்டு சட்னியை சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil