கிறிஸ்துமஸ் பெருவிழா – மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

Christmas 2019 wishes : கிறிஸ்துமஸ் பெருவிழா, உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

christmas, christmas 2019, christmas wishes, jesus christ, december 25, narendra modi, edappadi palanichami, o panneerselvam, governor banwarilal purohit
christmas, christmas 2019, christmas wishes, jesus christ, december 25, narendra modi, edappadi palanichami, o panneerselvam, governor banwarilal purohit, கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் வாழ்த்துகள், கிறிஸ்துமஸ் 2019, இயேசு கிறிஸ்து, டிசம்பர் 25, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிசாமி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் பன்னீர்செல்வம்

கிறிஸ்துமஸ் பெருவிழா, உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையை “கிறிஸ்ட் +மாஸ்” என பிரிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கி.மு. 7க்கும் கி.மு.2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஒரு யூகத்தின் அடிப்படையில், டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நுாற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்தவர்கள், ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகக் கொண்டாடினர்.பிற்காலத்தில் டிச.25 என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதோ வந்தாச்சு கிறிஸ்துமஸ் – நண்பர்களுக்கு சிறப்பு வாழ்த்து படங்கள் அனுப்புங்க

கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்பட்டது. மேலும் சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறிக் கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீட்டில் முழு சுதந்திரம் கொடுத்தனர்.

தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் மோடி : இந்த இனிய கிறிஸ்துமஸ் நன்னாளில், இயேசு கிறிஸ்துவின் நற்சிந்தனைகளை நினைவுகொள்வோம். அவரின் அளப்பரிய சேவையை இந்த நன்னாளில் நினைவுகூர்வோம். இன்னலில் இருந்த மனிதகுலத்தை மீட்கும் அவரது நிகழ்வுகளை நாம் மறக்க இயலாது. அவரது கோட்பாடுகள், உலகம் முழுமைக்கும் உள்ள மக்களால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித்: கிறிஸ்துமஸ் பண்டிகை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது, விட்டுக்கொடுத்து வாழ்வது போன்ற உயரிய நெறிகளை பயிற்றுவிப்பது. அது மட்டுமின்றி குடும்ப உறவுகள், நண்பர்கள் யாவருடனும் நல்லுறவு கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்திட வழிகாட்டுவதாகும். இப்பண்டிகை, அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, சந்தோசம், செழிப்பு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

முதல்வர் பழனிசாமி : கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களுக்கும் கழகம் சார்பில், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் “கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்”!! #Christmas

துணை முதல்வர் பன்னீர்செல்வம்

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Christmas 2019 christmas wishes narendra modi edappadi palanichami christmas wishes

Next Story
Christmas Kolam Images: விருந்தினர்களின் மனதை மயக்கும் வாவ் கோலங்கள்!christmas images wishes, Christmas rangoli design, christmas kolam video, கிறிஸ்மஸ் கோலம், christmas
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express