Chutney Recipe in tamil: தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான உணவுகளாக இட்லி, தோசை போன்றவைகள் உள்ளன. இவற்றுக்கு சைட்டிஷாக வழங்கப்படும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, குருமா, சாம்பார் போன்றவைகள் இட்லி, தோசைகளை பிரலமான ஒன்றாக வளர்ந்து வருகின்றன. தவிர, தேங்காய் சட்னி என்றால் அதில் பல வகைகளும், தக்காளி சட்னி என்றால் அதில் பல வகைகளும் உள்ளன.
அந்த வகையில் விதவிதமான சட்னி வகைகளுக்கு நடுவில் சுவையும் ருசியும் மிகுந்த தயிர் சட்னி எப்படி தாயர் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1
கடுகு – 1 டீ ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தே.அ
மிளகாய் தூள் – 1டீ ஸ்பூன்
தனியா தூள் – 2 டீ ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2டீ ஸ்பூன்
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஃபிரெஷான கெட்டித் தயிரை நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு அதில், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்துக் கலந்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். அவை பொறிந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின்னர், வெங்காயம் சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள தயிரை ஊற்றி உடனே கிளறவும்.
தொடர்ந்து தயிர் இருந்த பாத்திரத்திலேயே 1/4 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுற்றிலும் ஒட்டியிருக்கும் தயிரை வழித்துவிட்டு கடாயில் ஊற்றவும். பிறகு ஒரு மூடியால் மூடி 10 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும்.
இப்போது அவை கொதிந்ததும் மூடியை திறந்து பார்த்தால் தயிர் கெட்டியாகி இருக்கும். அதை மேலும் கிளறிக்கொண்டே இருந்தால் தண்ணீர் இறுகி கெட்டியாக வந்து விடும். பிறகு கொத்தமல்லி இலை தூவி அடுப்பில் இருந்து கீழே இறக்கினால் போதும் தயிர் சட்னி தயாராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)