Advertisment

வேர்க்கடலை, பூண்டு, சீரகம்… டேஸ்டி சட்னி இப்படி செய்து பாருங்க!

Peanut Chutney Recipe in Tamil: வேர்க்கடலை சட்னி செய்ய எளியமையான செய்முறையை இங்கு வழங்கியுள்ளோம்.

author-image
WebDesk
New Update
Chutney Recipe Tamil News: peanut chutney recipe in tamil

Chutney Recipe Tamil News: தென்னிந்திய உணவுகளில் இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் எந்த அளவிற்கு பிரபலமான ஒன்றாக உள்ளதோ அந்த அளவிற்கு அவற்றுக்கு சைடிஷ்சாக உள்ள சட்னி வகைகள் உள்ளன. இதற்கிடையில் சட்னி வகைகளுக்கு டாஃப் கொடுக்கும் அளவிற்கு பொடி வகைகளும் களமிறங்கியுள்ளன. இருப்பினும் சட்னி வகைகளே பெரும்பாலோனர் விரும்பும் விதமாகவும், தயாரிக்கும் விதமாகவும் உள்ளன.

Advertisment

இது ஒரு புறம் இருக்க, உங்கள் வீடுகளில் காலையில் செய்யப்படும் சுவையான உணவுகளுக்கு சட்னி தயார் செய்வதில் பல நேரங்களில் உங்களுக்கு குழப்பம் எழலாம். அதே வேளையில் நீங்கள் ஆவலோடு செய்த சட்னி உங்கள் விருப்பமானவர்களுக்கு பிடிக்காமல் பொய் விடும். அவ்வாறு நடந்து விடாமல் இருக்கவும், உங்கள் சுவையான காலை உணவுகளுக்கு கூடுதல் சுவையை கொடுப்பதற்கும் இங்கு நாங்கள் பரிந்துரை செய்துள்ள சட்னியை நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.

இதன் செய்முறை எளிமையானது, தொந்தரவில்லாதது, மேலும் பல உணவுகளுடன் சேர்த்து கொள்ளக்கூடிய வகையில் அமைத்துள்ளது.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை - 200 கிராம்

பூண்டு - 3 தேக்கரண்டி

சீரகம் - 2 தேக்கரண்டி (சுவைக்கு ஏற்ப)

உப்பு - சுவைக்கு ஏற்ப

சிவப்பு மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி (உங்கள் விருப்பப்படி அளவை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம்)

நீங்கள் செய்ய வேண்டியவை

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வேர்க்கடலையை இட்டு, நடுத்தர தீயில் நன்றாக வறுக்கவும். ஒரு முறை குளிர்ந்ததும் வேர்க்கடலை தோல்களை நீக்கவும்.

இப்போது மிக்சியில் வேர்க்கடலை இட்டு நொறுநொறுப்பான பதத்தில் அரைக்கவும். பின்னர் சீரகம் மற்றும் பூண்டு சேர்த்து தனியாக
அரைக்கவும்

அதன் பிறகு அரைத்து வைத்துள்ள எல்லா பொடிகளையும் ஒரே தூளாக சேர்த்து கலக்கவும்.

இந்த தூளை தயிருடன் சேர்த்து சட்னியாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் சான்டவிச் போன்றவற்றோடும் சேர்த்து உண்ணலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  " (https://t.me/ietamil)

Lifestyle Food Recipes Food Tips Healthy Food Tips Healthy Food Tamil News 2 Chutney Recipe Chutney
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment