Chutney recipes in tamil: தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமான உணவுகளாக இட்லி, தோசை ஆப்பம் போன்ற உணவுகள் உள்ளன. இவற்றுக்கு தொட்டுக்கொள்ள நமது வீடுகளில் தயார் செய்யும் சட்னி, சாம்பார், குருமாக்கள் அற்புதமாக இருக்கும்.
சட்னி – சாம்பார்களில் இப்போது பல வகைகள் தோன்றிய வண்ணம் உள்ள நிலையில் அவற்றை தயார் செய்வதற்கான நேரம் மற்றும் செய்முறை ஈஸியானதாக இருக்கிறது. அந்த வகையில் தேங்காய் இல்லாமல் சூப்பரான மற்றும் சுவையான சட்னி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம். இந்த சட்னி தயாரிக்க 5 நிமிடம் என்பதே அதிகம் தான்.
தேவையான பொருட்கள்:
அரைக்க
எண்ணெய் – தேவையான அளவு
பச்சை மிளகாய் – 3 (நடுவில் கீறியது)
பூண்டு
பெரிய வெங்காயம் – 2
பொட்டுக்கடலை – 50 கிராம்
புளி – சிறிதளவு
தாளிக்க
எண்ணெய்
கருவேப்பிலை
கடுகு
உளுந்தம் பருப்பு
பெருங்காயம்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். பிறகு மேலே அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். அதன் பிறகு அவற்றை நன்கு ஆற வைத்து மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அவற்றுடன் தாளிப்பை சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த தேங்காய் இல்லாத சட்னி தயாராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“