Chutney recipes in tamil: தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், 'எங்கள் தக்காளி வீட்டில் தக்காளி சட்னி' என்று கூறினால், 'சமூகம் பெரிய இடமோ' என்று நண்பர்கள் கலாய்க்கின்றனர். எனவே, இந்த நேரத்தில் மாற்று சட்னிகளை நோக்கி மக்கள் நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
Advertisment
தாக்களி இல்லாமல் பல வகை சட்னிகள் இருந்தாலும், தக்காளி இல்லாத கார சட்னிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில், இன்று நாம் பார்க்கவுள்ள கார சட்னிக்கு தக்காளி தேவையில்லை. மேலும், இட்லி, தோசைகளுக்கு அருமையாக இருக்கும்.
இந்த தக்காளி இல்லாத கார சட்னி எப்படி செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
தக்காளி இல்லாத கார சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
Advertisment
Advertisements
அரைக்க:
தனியா விதை அல்லது மல்லி விதை – 2 ஸ்பூன் வெந்தயம் – 10 வர அல்லது உலர்ந்த மிளகாய் – 3 காஷ்மீரி மிளகாய் – 3 எண்ணெய் – தேவையான அளவு பெரிய வெங்காயம் – 2 பூண்டு – 10 பற்கள் புளி – சிறு துண்டு உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - தேவையான அளவு கடுகு – 1/2 டீஸ்பூன் உளுந்து – 1 ஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை கறிவேப்பிலை – ஒரு கொத்து, வர மிளகாய் – ஒன்று.
தக்காளி இல்லாமல் கார சட்னி சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதை சூடேற்றி மேலே அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் தனியா விதை வெந்தயத்தை மட்டும் வறுத்துக்கொள்ளவும்.
பிறகு வர மிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாயை எண்ணெயில் இட்டு வறுத்துக்கொள்ளவும். அவற்றை ஒரு மிக்சியில் இட்டு அப்படி சிறிது நேரம் தனியாக ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும்.
பின்னர், அதே பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு பூண்டையும் அதில் இட்டு வதக்கவும். தொடர்ந்து சிறிதளவு புளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இவற்றையும் நன்கு ஆற வைத்து முன்னர் அரைத்து வைத்துள்ளவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
இப்போது, அரைத்தவற்றை தனியாக வைத்துவிட்டு அவற்றுக்கான தாளிப்பை தயார் செய்யவும்.
தாளிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக இட்டு தாளிப்பை தயார் செய்து கொள்ளவும்.
பின்னர் அவற்றை முன்பு அரைத்து வைத்துள்ள கார சட்னியுடன் சேர்க்கவும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த தக்காளி இல்லாத கார சட்னி தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசிக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“