Chutney recipes in tamil: புதினா இலை பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும். இவற்றின் சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக் குணமாக்கும்.
புதினாவில் தயாரிக்கப்படும் எண்ணெய் தலைவலி, வாதம் மற்றும் பிற வலிகள் போன்றவற்றிற்காக தடவுகின்ற களிம்பு, வயிற்றுக் கோளாறு மருந்துகள், இருமல் மருந்துகள், வாய் கொப்பளிக்கும் தைலம் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட புதினாவோடு நிலக்கடலை சேர்த்து சட்னி எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
புதினா நிலக்கடலை சட்னி செய்யத் தேவையான பொருட்கள்
அரைக்க
புதினா – 1 கைப்பிடி
கொத்தமல்லி – 1/2 கைப்பிடி
பச்சை மிளகாய் – 5
புளி – நெல்லிக்காய் அளவு
இஞ்சி – சிறிய துண்டு
வேர்க்கடலை – 1/4 கப்
தேங்காய் – 1/4 மூடி
தாளிக்க
கடுகு
உளுந்தம் பருப்பு
எண்ணெய் – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 2
சட்னி செய்முறை
முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்தும் அவற்றோடு சிறிதளவு தண்ணீர் சேர்த்தும் அரைத்துகொள்ளவும்.
பின்னர் அவற்றை எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இப்போது நீங்கள் விரும்பிய புதினா நிலக்கடலை சட்னி தயாராக இருக்கும். அவற்றை உங்கள் உணவுகளோடு சேர்த்து ருசிக்கவும்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“