ஆண், பெண் என பேதமின்றி அனைவருக்கும் கருமையான கூந்தல் இருப்பதையே அனைவரும் விரும்புவர். ஆனால், தற்போதைய கால சூழ்நிலை, இயந்திரத்தனமான வாழ்க்கை, மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை நடைமுறை உள்ளிட்டவைகளின் காரணமாக, இளம்வயதிலேயே, முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறோம்......
காபி, டீ அனைவரும் விரும்பும் புத்துயிர் அளிக்கும் பானம். காபி அதிகம் குடிச்சா இளநரை வரும் என்பது அனைவரும் மற்றவர்களுக்கு இலவசமாக அளிக்கும் அறிவுரை ஆகும். ஆனால், அந்த காபியிலேயே தலைக்கு குளிச்சா, தலைமுடி கரு கருவென்று கருமையாக வளரும் என்று சொல்கிறது ஓர் ஆய்வு...
காபியில் உள்ள காபின் எனும் வேதியியல் பொருள், தலைமுடியின் தன்மையே மேம்பட உதவுகிறது. முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதுதொடர்பான ஆய்வு 2007ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதில், ஆண்களிடையே, காபின் பொருள் ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது. பெண்களில், காபின் பொருள், ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தி வலிமையான மற்றும் அடர்த்தியான தலைமுடியின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது.
காபினில் உள்ள பிளேவனாய்டுகள் அடிப்படையில் ஆன்டி ஆக்சிடெண்டுகளாக உள்ளன. இவை, முடி வளர்ச்சியில் உள்ள தடைகளை அகற்றி முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. காபிக்குளியல், செம்பட்டை நிறத்தில் உள்ள முடிகளின் நிறத்தை கருமையாக மாற்ற பெரிதும் துணைபுரிவதாக ஆய்வுமுடிவுகள் தெரிவிக்கின்றன.
காபி குளியல் செய்முறை
உங்கள் முடியின் நீளத்திற்கு தகுந்தாற்போல, காபியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக்கொள்ளவும். பின் அதனை, தலையில் ஷாம்பூ போன்று நன்றாக அலசி, முடியின் மயிர்க்கால்கள் வரை நன்றாக ஊறும்வரை சிறிதுநேரம் காத்திருக்கவும். பின் தலைப்பகுதியை நன்றாக அழுத்தி மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடங்கள் கழித்து, சுத்தமான நீரால் அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், முடியின் நிறம், தன்மை உள்ளிட்டவைகளிலும் எதிர்பார்த்த அளவிற்கு நன்மை பயக்கும் மாற்றங்களை கண்முன்னே காணலாம்.