இந்திய மசாலாப் பொருட்களின் பட்டியல் நீளமானது. சிலர் சிறப்பு சமையல் வகைகளைத் தயாரிக்கும்போது கலோஞ்சி மற்றும் வெந்தயம் ஆகியவற்றைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். மேலும் சிலர், மஞ்சள் மற்றும் கடுகு போன்ற வழக்கமான மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். மாறுபட்ட சுவைகளைச் சேர்ப்பதோடு, இந்த மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருள்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல நன்மைகளையும் வழங்குகின்றன. அத்தகைய ஒரு மசாலாதான் கடுகு விதை. கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்து மதிப்பு அதிகம் உள்ளதாகவும் உள்ள இந்த கடுகில் ஆண்டிசெப்டிக் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் உள்ளன. பொதுவாக கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை வகைகளில் காணப்படும் கடுகு, நன்றாகத் தூளாக அரைக்கப்படுகின்றன அல்லது உணவுகளில் தாளித்துப் பயன்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலான இந்திய வீடுகளில் பொதுவாகக் காணப்படும் கருப்பு கடுகு விதைகள் சமைக்கும்போது தவறாமல் பயன்படுத்தப்படுகின்றன. அவை பெரும்பாலும் முழுதாகவே உணவுகளுடன் சேர்க்கப்படுகின்றன. அல்லது பிற நறுமணப் பொருட்களுடன் வறுத்துச் சேர்க்கப்படுகின்றன. வெள்ளைக் கடுகு விதைகளை உணவுகளில் சேர்த்து வறுக்கவும் அல்லது ஊறுகாய்க்குப் பயன்படுத்தவும் செய்யலாம்.
* கடுகு விதைகளில் தாதுகள் நிரம்பியுள்ளன. மேலும் அவை கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்தவை.
* பாரம்பரியமாக, கடுகு விதைகள் சளி பிரச்சனைகளின் அறிகுறிகளை அகற்றவும், செரிமானத்திற்கு உதவவும், வலிகளைக் குறைக்கவும், சுவாசப் பிரச்சினைகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்பட்டன.
* பிரவுன் கடுகு விதைகளில் பல்வேறு வகைகள் உள்ளன.
* வெள்ளை கடுகு, பிரவுன் கடுகு விதைகளை விடச் சற்று பெரியதாக இருக்கும். மஞ்சள் அல்லது சாயத்தை சேர்ப்பதன் மூலமாக இவை பிரகாசமான மஞ்சள் கடுகுகளாக மாறுகின்றன.
கடுகு விதைகளின் சில நன்மைகள்
* கடுகு உடலில் செரிமானத்தை மேம்படுத்தும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரம். அவை குடல் இயக்கங்களை சீராக்குகின்றன. இதனால் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
* கடுகு விதைகளில் தாமிரம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற பல ஊட்டச்சத்துகள் ரத்த அழுத்த சிகிச்சைக்கு உதவுகின்றன.
* கடுகு விதைகள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்றும் அறியப்படுகிறது. இதில் தாமிரம், மெக்னீசியம், இரும்பு மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் இருப்பது ஆஸ்துமா தாக்குதல்களைத் தடுக்க காரணமாகின்றன.
* கடுகு விதைகள் கரோட்டின் மற்றும் லுடீனின் சிறந்த ஆதாரத்தை உருவாக்குகின்றன. இது வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றின் சிறந்த சக்தி இல்லம். இந்த ஊட்டச்சத்துக்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றத்தை உருவாக்குகின்றன.
* இந்த விதைகளில் நல்ல அளவு கந்தகம் உள்ளது. இது பூஞ்சை எதிர்ப்பு பண்புகளுக்குப் பெயர் பெற்றது. அவை தோல் நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவுகின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.