சோள ஊத்தாப்பம்: காலை சாப்பாடா இதை “ட்ரை” பண்ணுங்க

பாரம்பரிய உணவு செய்ய வேண்டும். ஆனால் எப்படி என்று தெரியாத நபர்களுக்கு இந்த ஊத்தப்பம் ஒரு வரம் தான்.

cooking traditional food sola uthappam recipe video
Photo: Shalini Rajani

Sola Uthappam : பாரம்பரிய உணவு பழக்க வழக்கத்தை நாம கொஞ்ச காலமா பின்பற்றி வர்றோம். ஆனாலும் களி, கூழ் தவிர வேற என்ன செய்றதுன்னு தெரியாம கொஞ்சம் திண்டாடி தான் போறோம். சோள தோசை கேள்வி பட்டிருந்தீங்கன்னா சோள ஊத்தாப்பம் இன்னும் ஈஸி தான் உங்களுக்கு. சோள ஊத்தாப்பம் செய்வது எப்படி என்பதை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்

தேவையான பொருட்கள் (ஒருவருக்கு)

4 டேபிள் ஸ்பூன் – சோள மாவு
3 டேபிள் ஸ்பூன் – தயிர்
இந்துப்பு
சிறிதாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய்
ஜுச்சினி 1
பிட்சாவுக்கு பயன்படுத்தப்படும் சீசனிங்
தேவையான அளவு எண்ணெய்

மேலும் படிக்க : வறுத்து அரைத்தால் போதும்… வித்தியாச முறையில் சாம்பார்!

செய்முறை

மேலே கூறிய காய்கறிகளை முதலில் நறுக்கி, அதில் உப்பு, பீட்சா சீசனிங் அனைத்தும் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தில் சிறிது உப்பு, தயிர் மற்றும் சோள மாவு ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊத்தாப்ப மாவு பதத்திற்கு தயார் செய்து கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து நன்றாக கலக்கவும்

பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, மாவை ஊற்றவும். அதில் சீசனிங் செய்யப்பட்ட ஜுச்சினியை வைத்து இரண்டு பக்கமும் நன்றாக வெந்த பின்பு எடுத்து பறிமாறவும்.

பாரம்பரிய உணவு செய்ய வேண்டும். ஆனால் எப்படி என்று தெரியாத நபர்களுக்கு இந்த ஊத்தப்பம் ஒரு வரம் தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cooking traditional food sola uthappam recipe video

Next Story
பிக் பாஸ் வாய்ப்பு பெறும் கனி? குக் வித் கோமாளி ஸ்டார் பர்சனல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com