coriander recipes in tamil: நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்க்கப்படும் முக்கிய பொருட்களுள் ஒன்றாக கொத்தமல்லி தழைகள் உள்ளன. மேலும், எளிதில் கிடைக்கும் ஒரு பொருளாகவும் கொத்தமல்லி உள்ளது. அதோடு, கொத்தமல்லி தழை மூலமாக செய்யப்படும் ரசம், துவையல் ஆகியவை டேஸ்டாகவும் இருக்கும்.
Advertisment
நம்முடை வீட்டில் உணவுக்கு சரியான சைட் டிஷ் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். கொத்தமல்லி துவையல் அவற்றுக்கு ஏற்ற ஒன்றாகும். அம்மா ஊட்டாத சாதத்தை கொத்தமல்லி துவையல் ஊட்டும் என்பார்கள். அந்த அளவிற்கு சுவைமிகுந்த சூப்பரான சைட் டிஷ் ஆக கொத்தமல்லி துவையல் உள்ளது.
இப்போது இந்த அற்புதமான கொத்தமல்லி துவையலுக்கான சிம்பிள் செய்முறையை பார்க்கலாம்.
கொத்தமல்லி துவையல் செய்யத் தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி - 1 கொத்து நல்லெண்ணெய் - சிறிதளவு பச்சை மிளகாய் அல்லது வர மிளகாய் - காரத்திற்கு ஏற்ப கருப்பட்டி அல்லது வெல்லம் - சிறிதளவு பூண்டு - 5 பற்கள் உப்பு - தேவையான அளவு புளி - சிறிதளவு
கொத்தமல்லி துவையல் சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க துவங்கவும்.
தொடர்ந்து புளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
பிறகு அவற்றுடன் மல்லி தழை மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
இவை நன்றாக ஆறிய பிறகு அவற்றுடன் சிறிதளவு வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
பின்னர் இவற்றுடன் தாளிப்பு சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த சுவையான மற்றும் சூப்பரான கொத்தமல்லி துவையல் தயராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“