மக்காச்சோளம் ஒரு முக்கிய உணவுப் பயிராகும். இதனைக்கொண்டு ரொட்டி, பாப்கார்ன், ஸ்வீட் கார்ன் போன்ற உணவுப்பொருட்களை செய்வோம். சோளம் எடைக்குறைப்புக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பார்ப்போம்.
ஃபெருலிக் அமிலம் ஒரு தனித்துவமான பைட்டோகெமிக்கல், இது பெரும்பாலும் தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் மிக குறைந்த அளவில் காணப்படுகிறது. ஆனால் சோளத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. சோளத்தை சமைப்பதால் ஃபெருலிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது.
கரோட்டின் காரணமாக சோளம் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலும் அதில் சிறிதளவு பீட்டா கரோட்டின் உள்ளது. கரோட்டின் ஆக்சிஜனேற்ற எதிர்வினைகள் மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுகின்றன.
ஸ்வீட்கார்ன் ஒரு வகை சோளம் ஆகும். இதில் கார்போஹைட்ரேட், மினரல்ஸ், வைட்டமின்கள் உள்ளன. ஸ்வீட்கார்ன் ஒரு நல்ல புரோபயாடிக், ஏனெனில் இது குடலுக்கு தீங்கிளைக்காத நல்ல பாக்டீரியாக்களை கொண்டுள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு வளர்சிதை மாற்றத்தை எளிதாக்குகிறது.மேலும் எடை இழப்புக்கு உதவுகிறது. இதில் ஆக்சிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் ஏ,பி,மற்றும் சி உள்ளன. இது ஆரோக்கியமான தோல், பார்வை மற்றும் சளிச்சுரப்பியை பராமரிக்க உதவுகிறது.இது துத்தநாகம், தாமிரம்,இரும்பு, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களை கொண்டுள்ளது.
இது பச்சையம் இல்லாதது எனவே செலியாக் நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது.எடை இழப்புக்கு உதவுவதை தவிர, தினசரி வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான கலோரிகளை வழங்குகிறது. இது சக்தி நிறைந்த உணவாக இருந்தாலும் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது என்று உணவியல் நிபுணர் ரிங்கி குமாரி கூறுகிறார்.
மக்காச்சோளத்தில் கார்போஹைட்ரேட், மினரல்ஸ், வைட்டமின்கள், பொட்டாசியம் பாஸ்பரஸ், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சோளத்தில் நார்ச்சத்து 15 சதவீதம் உள்ளது, அதில் 9 சதவீதம் கரையக்கூடியது.சோளத்தின் கிளைசெமிக் குறியீடு அதிகம், எனவே நீரிழிவு நோயாளிகள் மற்றும் எடை குறைவாக உள்ளவர்கள் மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil