scorecardresearch

கொரோனா வைரஸ் சவால் – நீங்கள் ஒரு லட்சம் வரை வெல்ல செய்ய வேண்டியது என்ன?

இதை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2020. முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சம், இரண்டாவது பரிசு ரூபாய் 50,000/-, மூன்றாவது பரிசு ரூபாய் 25,000

Coronavirus challenge win up to Rs 1 lakh pm modi announced
Coronavirus challenge win up to Rs 1 lakh pm modi announced

Corona Updates: பிரதமர் நரேந்திர மோடி தலமையிலான மத்திய அரசு தொடங்கியுள்ள “COVID-19 Solution Challenge” போட்டியில் பங்கெடுத்து ஒரு லட்சம் வரை பரிசு தொகையை வெல்லலாம். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் உங்கள் உள்ளீடுகள் மற்றும் யோசனைகளை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். “Help us to Help you” என்ற பிரச்சாரத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் துவங்கியுள்ளது.


அதே நேரம், சாதாரண மனிதர்களின் தீவிர ஈடுபாட்டை நாடி மத்திய அரசு – கொரோனா வைரஸை எதிர்கொள்ள உதவ உங்கள் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கூறுங்கள் (“Share your Ideas & Suggestions to help fight Coronavirus”) மற்றும் கோவிட் -19 தீர்வு சவால் (“COVID-19 Solution Challenge”) என்ற இரண்டு விழிப்புணர்வு பிரச்சாரங்களை துவங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு – மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து முழுவதும் ரத்து

வைரஸை எதிர்கொள்ள உதவ உங்கள் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கூறுங்கள்

இந்திய மக்களின் துடிப்பான (“active”) உதவியுடன் கொரோனா வைரஸின் பரவல் நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் சமுதாய பங்களிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு குடிமக்களின் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை கேட்க வேண்டும் எனவும் மத்திய அரசு விரும்புகிறது. இது சுகாதாரம் தொடர்பான புதுமையான மற்றும் சிறந்த நடவடிக்கைகளாக இருக்கலாம் அல்லது கைகழுவுவது தொடர்பாக, சமூக விலகல் தொடர்பாக, கொரோனா தொடர்பான வதந்திகளை தடுப்பது தொடர்பாக அல்லது பீதியடைவதை காட்டிலும் தயாராக இருப்பது தொடர்பாக கூட இருக்கலாம். அமைதியாக அதே சமயம் விழிப்புடன் இருங்கள். கொரோனா வைரஸுக்கு எதிரான இயக்கத்தில் ஒரு அங்கமாக இருங்கள், என மத்திய அரசு கூறியுள்ளது.

யோசனைகளை பகிரவேண்டும் என என்னும் குடிமக்கள் https://www.mygov.in/group-issue/share-your-ideas-suggestions-help-fight-coronavirus/?utm_source=webcampaign&group_issue&285571 என்ற இணையதள முகவரிக்கு சென்று பார்க்கலாம். யோசனைகளை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 30 ஏப்ரல்.

வீட்டில் இருந்து அலுவலக வேலைகளைப் பார்க்க இடம் தயாரா?

கோவிட்-19 தீர்வு சவால்

மத்திய அரசு மக்கள் தங்களின் புதுமையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பகிர வேண்டும் என எண்ணுகிறது. இதை சமர்பிப்பதற்கான கடைசி தேதி 31 மார்ச் 2020. முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சம், இரண்டாவது பரிசு ரூபாய் 50,000/-, மூன்றாவது பரிசு ரூபாய் 25,000/-.

விண்ணப்பதாரர்கள் தனிநபர்களாகவோ அல்லது புதிய நிறுவனங்களாகவோ இருக்கலாம். இதில் பங்கெடுப்பதற்கான தகுதியை மத்திய அரசு வகுத்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Coronavirus challenge win up to rs 1 lakh pm modi announced

Best of Express