Coronavirus Food Safety Tips: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டு கொரோனா போன்ற வைரஸ்களை அண்ட விடாமல் விரட்டலாம்.
சீனாவின் வுஹான் நகரத்தில் உள்ள ஒரு கடல் உணவு சந்தையில் இருந்து பரவியாதாக நம்பப்படும் கொரோனா வைரஸ் நோயால், இந்தியாவில் மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எளிதில் பரவக்கூடிய தொற்று நோயான இந்நோய்க்கு இதுவரை சீனாவில் மட்டும் 300 பேர் பலியாகியுள்ளனர்.
10% இந்தியர்களுக்கு புற்று நோய் வரும்; 15 பேரில் ஒருவர் இறப்பார் - உலக சுகாதார அமைப்பின் அதிர்ச்சி அறிக்கை
இந்நிலையில், மக்களின் கவனம் இந்நோய்கான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் பக்கம் திரும்பியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உட்கொண்டு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலம் இந்நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ளலாம்.
சோப்பு போட்டு அடிக்கடி கைக் கழுவுவது, கை மற்றும் விரல்களை கொண்டு வாய், மூக்கு மற்றும் கண்களை தொடாமல் இருப்பது, வேக வைக்காமல் குறிப்பாக மாமிச உணவுகளை உட்கொள்வதை தவிர்ப்பது, முகமூடி அணிவது ஆகியவை இந்நோய் பரவாமல் தடுப்பதற்கான அடிப்படை தடுப்பு நடவடிக்கைகளாகும்.
இவ்வகை ஆரோக்கிய நடவடிக்கைகளை கடைபிடிப்பது ஒரு பக்கம் இருந்தாலும், நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவு பொருட்களான இஞ்சி, பூண்டு, சோம்பு, வேர்கடலை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, திராட்சை, வைட்டமின் ’சி’ சத்து நிறைந்த உணவு பொருட்கள் ஆகியவற்றை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். மேலும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலமும், கேப்ரிலிக் அமிலமும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. எனவே தேங்காய் எண்ணெயை அன்றாடம் சமயலுக்கு பயன்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளலாம்.
பிள்ளைகளைவிட கணவனே மன அழுத்தத்துக்கு காரணம் - ஆய்வில் பெண்கள் வெதும்பல்
நமது உடலில் உள்ள வைட்டமின் டி3 சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் எனவே வைட்டமின் டி3 சத்தின் அளவை குறையாமல் பார்த்துக்கொள்வதும் மிகவும் அவசியம். வெள்ளை சீனியை தவிர்ப்பதும் கனிம சத்துகள் நிறைந்த பூசணிக்காய் மற்றும் சூரியகாந்தி விதைகள், உப்பு சேர்க்காத முந்திரி பருப்பு ஆகியவற்றை உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இவ்வகையான உணவுகளை உட்கொள்வதுடன் நல்ல உடற்பயிற்சி மற்றும் அளவான தூக்கமும் அவசியமாகிறது.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி, மூச்சுத்திணறல் ஆகியவை இந்நோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் ஒருவருக்கு ஆறு, ஏழு நாட்களுக்கு மேல் நீடித்தால் அவர் உடனடியாக மருத்துவ ஆலோசணை பெறுவது அவசியம்.
மகேஷ் எஸ்