கொரோனா அசதியெல்லாம் பறந்து போக பாசிப்பருப்பு சூப்.. இப்படி சமைச்சுப் பாருங்க!

Covid care recipe: Why moong dal soup is good for you: ஆயுர்வேதத்தில் பாசி பருப்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது மற்றும் மனித உடலை வளர்ப்பதற்கான சிறந்த பயறு என்றும் கருதப்படுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன

இந்த தொற்றுநோய் நாம் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை நன்கு உணர்த்தியிருக்கிறது. மேலும் உடலை ஃபிட்டாக வைத்து இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியை ஓரிரு நாட்களில் மேம்படுத்த முடியாது என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதற்கு பதிலாக ஒரு செயல்முறையாக, ஒருவர் தொடர்ந்து சத்தான உணவை சாப்பிடுவதை பயிற்சி வேண்டும். வீட்டில் சமைத்த எளிய உணவுகள் அதைச் செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். அதேநேரம் உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் சத்தான உணவு சாப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும். இந்த எளிய உணவுகளில் ஒன்றாக பாசிப்பருப்பு சூப் சிறந்தது என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால் கூறினார்.

மேலும் நீரிழப்பு மற்றும் காய்ச்சலிலிருந்து மீண்டு வருபவர்களுக்கும் இது நல்லது என்றும் கனேரிவால் கூறினார். “ஆயுர்வேதத்தில் பாசி பருப்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது மற்றும் மனித உடலை வளர்ப்பதற்கான சிறந்த பயறு என்றும் கருதப்படுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன ”என்று கனேரிவால் கூறினார்.

பாசி பருப்பின் நன்மைகள்

* ஆயுர்வேதத்தில் பாசி பருப்பு மிகவும் ஊட்டமளிக்கும் மற்றும் ஜீரணிக்க எளிதான உணவாக கருதப்படுகிறது.

* செரிமானத்தை எளிதாக்க உதவும் உயர் மதிப்புள்ள புரதத்தை பாசி பருப்பு வழங்குகிறது.

* உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்கவும் மற்றும் சில உடல் நல பிரச்சனைகளை குணப்படுத்துவதற்கும் உதவுகிறது.

“உங்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தாலோ அல்லது கொரோனா தொற்று பாதித்திருந்தாலோ, முதல் வாரம் பொதுவாக காய்ச்சல், சோர்வு, உடல் வலி, மோசமான பசி, குறைந்த ஆற்றல் மற்றும் குமட்டல் போன்ற காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த சூழ்நிலையில், சரியான நேரத்தில் ஊட்டமளிக்கக் கூடிய இலகுவான உணவை சாப்பிடுவது நல்லது. ” என்று கனேரிவால் கூறினார்.

இப்போது பாசி பருப்பு சூப் எவ்வாறு செய்வது என்பதைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

¼ கப் – பாசி பருப்பு

2 கப் – நீர்

1 டீஸ்பூன் – நெய்

½ டீஸ்பூன் – சீரகம்

½ டீஸ்பூன் – அரைத்த இஞ்சி

½ கப் – நறுக்கப்பட்ட காய்கறிகளும் (கேரட், பரங்கிக்காய், பூசணி)

¼ டீஸ்பூன் – மிளகு

சிறிதளவு – இஞ்சி தூள்

சிறிதளவு – ஓமம்

சிறிதளவு – அம்ச்சூர் தூள் (மாங்காய் பொடி)

தேவையான அளவு – உப்பு

ஒரு சில – கசூரி மேத்தி

செய்முறை

* ¼ கப் பாசி பருப்பை குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைத்து பருப்பை நன்றாக அலசவும்.

* ஒரு பிரஷர் குக்கரில் 1 டீஸ்பூன் நெய்யை சூடாக்கவும். அதில் ½ டீஸ்பூன் சீரகம் மற்றும் ½ டீஸ்பூன் புதிதாக அரைத்த இஞ்சியை சேர்த்து வதக்கவும்.

* இதில் ஊற வைத்த பாசி பருப்பைச் சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.

* பின்னர் ½ கப் நறுக்கிய காய்கறிகளை இதோடு சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்கவும்.

* அதன்பின் 2 கப் தண்ணீர் சேர்த்து 1-2 விசில்கள் வரும் வரை மிதமான சூட்டில் வேக வைக்கவும்.

* நன்றாக வேக வைத்த பின், ​​¼ டீஸ்பூன் மிளகு தூள், உலர்ந்த இஞ்சி தூள் (ஒரு சிட்டிகை), ஓமம் (ஒரு சிட்டிகை), அம்ச்சூர் (ஒரு சிட்டிகை), மற்றும் உப்பு ஆகியவற்றை அதில் சேர்க்கவும்.

* கரண்டியின் பின்புறத்தைப் பயன்படுத்தி பருப்பை நன்றாக கடைந்து விடவும். சூப் ஒரு கொதி நிலைக்கு வந்தபின், இறுதியாக சிறிது கசூரி மெதியையும் சேர்க்கவும்.

* பின்னர் இந்த சூப்பை இளஞ்சூடாக பரிமாறவும்.

இப்போது இந்த சுவையான சத்தான பாசி பருப்பு சூப்பை நீங்களும் செய்து பருகுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus home isolation best meal to include if your are covid

Next Story
“அவமானப்பட்டு நடுரோட்டில் அழுதிருக்கிறேன்” – ‘சத்யா’ ஆயிஷா கடந்து வந்த வலிகள்!Sathya Serial Ayeesha Lifestyle STory Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com