உளுந்து வேண்டாம்… அரிசி மாவுடன் இதைச் சேர்த்தால் கிரிஸ்பி தோசை கியாரன்டி!
Crispy dosai eppadi seyvathu tamil: மாவு ரொம்பவும் புளிக்காமல் இருக்க வெற்றிலையின் காம்பை கிள்ளி, வெற்றிலையின் மேல் புறம் மாவில் படும்படி கவிழ்த்து வைத்தால், அவற்றை குளிரூட்ட தேவை இருக்காது.
Crispy dosai eppadi seyvathu tamil: மாவு ரொம்பவும் புளிக்காமல் இருக்க வெற்றிலையின் காம்பை கிள்ளி, வெற்றிலையின் மேல் புறம் மாவில் படும்படி கவிழ்த்து வைத்தால், அவற்றை குளிரூட்ட தேவை இருக்காது.
Crispy dosa recipe in tamil: தென்னிந்தியாவின் பிரபலமான காலை உணவுகளாக இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை உள்ளன. இட்லி பிரியர்கள் அவை சூடாக இருக்க வேண்டும் என நினைப்பர். அதே வேளையில் தோசை பிரியர்கள் நன்றாக மொறு மொறுவென்று இருக்க வேண்டும் என நினைப்பர். நாம் என்னதான் ஹோட்டலில் சென்று மொறு மொறுவென்று கொடுக்கப்படும் தோசையை சில சட்னிகளுடன் சேர்த்து ருசித்தாலும், அவற்றை நாமே வீட்டில் செய்யும் போது தனி ருசி தான். மேலும் அவற்றோடு வீட்டில் இருக்கும் குழம்பு மற்றும் சட்னி வகைகைகளுடன் சேர்த்து சுவைத்தல் செம டேஸ்டியா இருக்கும்.
Advertisment
இருப்பினும், நம்முடைய வீடுகளில் நாம் சுடும் தோசை சில சமயங்களில் முறுகலாக வராது. அப்படி வர பெரிய மாயா வித்தை ஒன்றும் தேவை இல்லை. இங்கு நாம் கீழே பார்க்கவுள்ள சில சீக்ரெட்ஸ்களே போதுமானது. அப்படி என்ன தான் ரகசியம் உள்ளது என்று பார்ப்போமா?…
வீடுகளில் நாம் சுடும் தோசைக்கு பெரும்பாலும் இட்லி மாவையே பயன்படுத்துகிறோம். இருப்பினும், அவற்றுக்கு பதிலாக தோசைக்கெனச தனி மாவை தயார் செய்வது நல்லது. அவற்றுக்கு நீங்கள் மாவு அரைக்கும் வெந்தயம் கொஞ்சம் அதிகமாகவும், ஒரு பங்கு, பச்சரிசி மற்றும் இரண்டு பிடி அவல் சேர்க்க வேண்டும். அப்படி செய்யும் போது அவை நன்றாக சிவந்தும் மொறுமொறுவென்றும் வரும்.
மாவு ரொம்பவும் புளிக்காமல் இருக்க வெற்றிலையின் காம்பை கிள்ளி, வெற்றிலையின் மேல் புறம் மாவில் படும்படி கவிழ்த்து வைத்தால், அவற்றை குளிரூட்ட தேவை இருக்காது.
Advertisment
Advertisements
தோசை சுடும் கல் அவ்வப்போது நமக்கு ஒத்துழைக்காது. இந்த சமயத்தில் கல்லில் சேர்க்கும் எண்ணெய்யோடு சிறிதளவு புளியை சேர்த்துக்கொள்ளலாம். அல்லது கல்லில் மீது தேய்க்க பயன்படுத்தும் வெங்காயத்தை இரண்டாக வெட்டி, அவற்றை கல்லில் நன்றாக வதக்கிய பிறகு தோசையை சுட முயற்ச்சிக்கலாம்.
நீங்கள் ஒரு வேளை இட்லி மாவில் தோசை சுடுபவராக இருந்தால், தோசைக்கு மாவு தாயார் செய்யும் போது, ஒரு கரண்டி சர்க்கரையை அவற்றோடு சேர்த்து நன்றாக கலக்கி தோசையை ஊற்றினால், ஹோட்டலில் சுடும் தோசையே நம்மிடம் தோற்று ஓடி விடும்.
அந்த வகையில் தோசை சுட நாம் மேலே பார்த்த ரகசியங்கள் அனைத்தும் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இவற்றை நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாமே!!!
தமிழ் இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil