சீரகத் தண்ணீர் இப்படி தயார் பண்ணுங்க… அவ்ளோ பலன் இருக்கு!

Cumin water health benefits in tamil: இந்த அற்புத பானத்தை தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகிவந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

Cumin seeds benefits in tamil: How To Make Jeera Water Tamil

Tamil Health tips: நம்முடைய வீட்டு சமையலறையில் இடம் பெறும் முக்கிய பொருளாக சீரகம் உள்ளது. இதன் பேரிலேயே ஜீரணத்தை உணர்த்துவதால் சீரகம் பற்றி புதிதாய் சொல்ல வேண்டியதில்லை. சீரகம் பொதுவாக வயிறு உப்புசத்தை சரி செய்யும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிறு சம்பந்த பாதிப்பை குணப்படுத்தும் என நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதன் தண்ணீரை குடிப்பதால் இன்னும் பல அற்புத நன்மைகள் உண்டாகும் என்பது பலரும் அறியாத ஒன்றாக உள்ளது.

முதலில் சீரகத் தண்ணீர் எப்படி தயார் செய்யலாம் என்று பார்ப்போம்.

சீரகத் தண்ணீர் செய்யத் தேவையான பொருட்கள்:

தண்ணீர் – 200 மில்லி
சீரகம் – 1 ஸ்பூன்

சீரகத் தண்ணீர் செய்முறை:

முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அவற்றை சூடேற்றவும். பிறகு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
தொடர்ந்து சீராகம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின்னர் ஒரு வடிகட்டியில் வடிகட்டி குளிரவிட்டால் அற்புதமான சீரகத் தண்ணீர் தயாராக இருக்கும்.

சீரகத் தண்ணீரின் ஆரோக்கிய பயன்கள்:

இந்த அற்புத பானத்தை தினமும் காலையில் ஒரு டம்ளர் பருகிவந்தால் சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

கல்லீரலுக்கு வலு தரும் இந்த சீராக தண்ணீர் உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு சிறந்த அருமருந்தாகவும் இது உள்ளது.

தாய்ப்பால் வற்றிய தாய்மார்கள் தொடர்ச்சியாக சீரக நீரை பருகி வந்தால் பால் சுரப்பது நீடிக்கும் மற்றும் அதிகமாகும்.

நாம் அவ்வப்போது சாப்பிடும் துரித உணவுகளால் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை இந்த அற்புதமான பானம் அடித்து விரட்டுகிறது.

வயிற்று வலிக்கு நிவாரணம் தரும் சிறந்த வலி நிவாரணியாகவும் சீராக தண்ணீர் செயல்படுகிறது.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த விரும்பும் மக்கள் சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் பருகி வருவது மிகவும் நல்லது.

சீரக தண்ணீரில் பொட்டாசியம் நிரம்பி காணப்படுவதால் உடல் இயக்க செயல்பாட்டிற்கு அவை பெரிதும் உதவுகின்றது. மேலும், அவை ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தவும் உதவுகின்றது.

சீரக தண்ணீர் நம்மை பல்வேறு வகையான நோய் தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள உதவுகிறது. கொரோனா அச்சுறுத்தலில் மிக முக்கியமானதான சுவாச அமைப்பு சீராக செயல்படுவதற்கும் உதவுகிறது.

மேலும், சீராக தண்ணீரில் உள்ள பொட்டாசியம், கால்சியம், செலினியம், மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்துக்கள் சரும ஆரோக்கியத்தை பளிச்சிட வைக்கவும், கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் துணை புரியுவும் உதவுகின்றன. இவற்றில் உள்ள வைட்டமின்-ஈ, முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cumin seeds benefits in tamil how to make jeera water tamil

Next Story
டேஸ்டி பால் பாயாசம்: குக்கரில் இப்படிச் செய்தால் நேரம் மிச்சம்!Milk Kheer in tamil: Pal Payasam in Pressure Cooker tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com