curd chutney recipe in tamil: இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகள் பிரபலமான காலை – மாலை உணவுகளாக உள்ளன. அவற்றுக்கான சட்னி அல்லது சைடிஷ்களை தயார் செய்வது சற்று கடினமான ஒன்றாக உள்ளது. அதுவே தயாரிக்க சிம்பிளான சைடிஷ் ஆக இருந்தால் பேரின்பம் தான்.
அந்த வகையில், விதவிதமான மெயின் டிஷ், வித்தியாசமான சைடிஷ்களை விரும்புவார்களுக்கு இந்த தயிர் சட்னி சாப்பிட அருமையாக இருக்கும். அதோடு தயார் செய்யவும் எளிமையாக இருக்கும். தற்போது அவற்றுக்கு செய்முறை, தேவையான பொருட்களை பார்க்கலாம்.

தயிர் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
தயிர் – கால் லிட்டர்
எண்ணெய் – 4 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 2
வரமிளகாய் – 4
பூண்டு – 20 பல்
உப்பு – தேவையான அளவு
வரமிளகாய் தூள் – 4 ஸ்பூன்
கரம் மசாலா – 2 ஸ்பூன்
தனியா தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
செய்முறை
முதலில் வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு கால் லிட்டர் தயிரை ஒரு கிண்ணத்தில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.
தொடர்ந்து அதில் 2 ஸ்பூன் வரமிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தொடர்ந்து பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
நாம் சேர்த்த வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் கலந்து வைத்த தயிர் கலவையை ஊற்றி கிளறவும்.
பின்னர் அவற்றுடன் மீதி இருக்கும் 2 ஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
இவற்றை 10 நிமிடங்களுக்கு மிதமான தணலில் வைத்து, அதில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டவும்.
பிறகு கொத்தமல்லி தழையை தூவி கிளறி இறக்கினால் சூப்பரான மற்றும் வித்தியாசமான தயிர் சட்னி தயார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“