Homemade yogurt simple tips in tamil: நமது உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுப்பொருட்களில் தயிரும் ஒன்று. ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்ட இந்த தயிர் இயற்கை உணவுகவாவும், ஊட்டச்சத்து நிறைந்தவையாவும் உள்ளது. நாம் அன்றாட பயன்படுத்தும் தயிர் பெரும்பாலும் கடைகளிலேயே வாங்கி வருவோம். அப்படியே வீட்டில் பால் வாங்கி தயார் செய்தாலும் நல்ல கெட்டித்தயிராக மாற அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
எனவே, நம்முடைய வீட்டிலேயே சூப்பரான மற்றும் சுவையான கெட்டித் தயிர் எப்படி ஒரு மணி நேரத்திலேயே தயார் செய்வது என்று இங்கு பார்க்கலாம்.
இன்ஸ்டன்ட் கெட்டித் தயிர் எப்படி தயார் செய்வது?

கெட்டித் தயிர் செய்யத்தேவையான பொருட்கள்:
பால் – 1/2 லிட்டர்
தண்ணீர் – 50 மில்லி லிட்டர்
கெட்டித் தயிர் செய்முறை:
முதலில் பாலுடன் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து கீழே இறக்கவும். பிறகு நன்கு ஆற வைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து ஆறிய பாலுடன் சிறிதளவு தாயிர் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது ஒரு குக்கரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அடுப்பை அணைத்து குக்கரினுள் ஆற வைத்த பாலை பாத்திரத்துடன் வைக்கவும். அந்த பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி, பிறகு குக்கரையும் குக்கர் மூடியால் மூடி கொள்ளவும்.
குக்கரின் சூடு மற்றும் விசில் குறைந்ததும் 1 மணி நேரத்திற்கு பிறகு உள்ளே வைத்த பாத்திரத்தை திறந்து பார்த்தல் நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் கெட்டியான தயிர் தயாராக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil