curd recipe in tamil: கோடை வெயில் குறைந்து மழை காலத்திற்கு நாம் நகர்ந்த பிறகும் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதை நாம் நிச்சயம் உணர்ந்திருப்போம். இந்த சமயங்களில் குளிர்ச்சியான உணவுப்பொருட்களை தெரிவு செய்து உண்பது மிகவும் அவசியமான ஒன்றாகவும். அந்த வகையில் தயிர் மற்றும் மோரில் தயார் செய்யப்படும் உணவுகளை நாம் அவ்வப்போது சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இப்போது தயிர் மற்றும் மோரில் பல வகை உணவு பொருட்கள் தயார் செய்யப்படுகிறது. தயிரில் தயாரிக்கப்படும் மோரை சாதாராமாக நாம் பல முறை அருந்தி இருப்போம். ஆனால் மசாலா மோராக நம்மில் சிலரே சுவைத்திருப்போம். நோய் எதிர்ப்பு சக்தி முதல் பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய தயிரில் மசாலா மோர் எப்படி எளிய முறையில் தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தயிர் – 250 மில்லி
பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி தழை – சிறிதளவு
புதினா தழை – சிறிதளவு
சாட் மசாலா – 1/4 டீ ஸ்பூன்
ப்ளாக் சால்ட் (கருப்பு உப்பு) – 1/4 டீ ஸ்பூன்
சீரகம் – 1/4 டீ ஸ்பூன் (இடித்தது)
மசாலா மோர் செய்முறை

முதலில் ஒரு பாத்திரம் அல்லது பவுள் எடுத்து அதில் தயிர் சேர்த்து அதே அளவு தண்ணீர் சேர்த்து கிரீம் போல நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
பிறகு சீரகம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, புதினா தழை, சாட் மசாலா, ப்ளாக் சால்ட் என அனைத்தயும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது தேவையையென்றால் சிறிதளவு தண்ணிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். பின்னர் டம்ளர்களில் பரிமாறி அருந்தி மகிழவும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“