கண்களுக்கு கீழ் கருவளையம்... காணாமல் போக செய்வது எப்படி??

டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம்

சில பெண்களுக்கு ரொம்பவே அழகாக தெரியும் கண்கள், சில பெண்களுக்கு அதுவே மைனஸாக மாறிவிடும். காரணம்,கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையம்.அதிகப்படியான வறட்சி, ஓய்வின்மை, தூக்கமின்மை, மலச்சிக்கல், கவலை போனற காரணங்களால் கண்களின் கீழ் கருவளையம் தோன்றுகிறது.

தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.சரியான தூக்கம் இல்லாத காரணத்தால், கண்களில் கரு வளையம் தோன்றும்.கருவளையம் முகப்பொலிவையே கெடுத்துவிடும். இதை கண்ட கண்ட க்ரீம்களைப் போட்டு முகத்தைக் கெடுக்காமல் இருப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.

காலம் காலமாக இந்த கருவளையத்தை போக்க பெண்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள். சத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு காரணமாக அமையலாம். சரி இந்த கருவளையத்தை எப்படி விரட்டியடிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

1. மசாஜ் கண்ணில் போடப்பட்ட மை , கண்களை சுற்றி போடப்பட்ட க்ரீம், தூசு போன்றவற்றை வெளியில் சென்று வந்த உடன் சுத்தம் செய்ய வேண்டும்.

2. இரவில் ஒரு சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கு சாறு எடுத்து கண்களுக்கு கீழ் 15 நிமிடங்கள் வைத்து பின் கழுவுதல் வேண்டும்.

3. அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி.வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம்.இதை தவிர்க்க அருகில் இருந்து டிவி பார்ப்பது, மொபைல் ஃபோனை கண்களுக்கு அருகில் வைத்து பார்ப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

4.இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை போன்றவற்றை அதிகளவில் உண்ண வேண்டும்.

5. கண்களுக்குப் போடும் அழகு சாதனங்களை நல்ல தரமான தயாரிப்புகளையே
வாங்கி பயன்படுத்தவும்.

6. கம்யூட்டர் முன் அமர்பவர்கள், நுட்பமான எலக்ரானிக்ஸ் வேலை செய்பவர்கள் அவ்வப் போது கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்.

×Close
×Close