Tamil Serial News : நடிகை நயன்தாராவை தெரியாதவர்கள் நிச்சயம் தென்னிந்தியாவில் இருக்க முடியாது. ஆனால் அவருக்கு பின்னணி குரலாக ஒலித்துக் கொண்டிருப்பது நடிகையும், ஆர்.ஜே-வுமான தீபா வெங்கட்.
கணவருடன் தீபா.
அந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்!
நடிகர் அஜித் நடித்த பாசமலர்கள் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் தீபா. அதன் பிறகு அஜித், விக்ரம் இணைந்து நடித்த உல்லாசம் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தினம்தோறும், பார்த்தாலே பரவசம், தில், உள்ளம் கொள்ளை போகுதே, பாபா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதே நேரத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் பிஸியாக வலம் வந்தார் தீபா வெங்கட்.
நயன்தாராவுடன் தீபா.
96-ம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான இப்படிக்கு தென்றல் என்ற சீரியல் தான் தீபாவிற்கு முதல் தொலைக்காட்சி எண்ட்ரியைக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மேலும் பல சீரியல்களில் நடித்து வந்த அவருக்கு, சித்தி சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. அதில் விஜி என்ற பாசிட்டிவான பெண்ணாக நடித்திருந்தார். பின்னர் கோபுரம், அண்ணாமலை, ரோஜா, கோலங்கள் என 2010-ஆம் ஆண்டு வரை படங்களிலும் சீரியலிலும் பிஸியாக இருந்தார்.
கேம் ஓவர் படத்திற்காக வாங்கிய விருதுடன்...
குறிப்பாக தேவயானியின் தோழியாக கோலங்கள், நாடகத்தில் நடித்த உஷா கதாபாத்திரத்தை ரசிகர்களால் எப்போதுமே மறக்க முடியாது. கிட்டத்தட்ட 80 சீரியல்களில் நடித்துள்ளார் தீபா. இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதை அளித்து சிறப்பித்துள்ளது. 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தீபா, அதன் பிறகு சினிமாவுக்கும் சீரியலுக்கும் இடைவெளி விட்டார். ஆனால் தனியார் வானொலியில் ஆர்ஜே-வாக 10 ஆண்டுகள் பணியாற்றி கடந்தாண்டு அதிலிருந்தும் பிரேக் எடுத்தார்.
படிப்புக்குப் பாதிப்பு இல்லாமல் ஸ்கூல், டப்பிங், ஆக்டிங்னு பரபரப்பா இயங்கியிருக்கிறார் தீபா. ரெகுலர் காலேஜில் படிக்க நேரம் இல்லாமல், கரஸில் யூஜி, பிஜி கோர்ஸ் முடித்திருக்கிறார். அப்படி முதல் வருஷம் படிக்கும் போது தான், ‘அப்பு’ படத்தில் தேவயானிக்கு டப்பிங் பேச வாய்ப்பு வந்திருக்கிறது. அதுதான் ஹீரோயினுக்காக அவர் பேசிய முதல் டப்பிங்.
அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க, நிறைய நடிகைகளுக்கு குரல் கொடுக்க வரிசையாக வாய்ப்பு வந்திருக்கிறது. ‘தில்’, ‘ஆனந்தம்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘ஏழுமலை’, ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’, ‘மயக்கம் என்ன’, ‘தெய்வத்திருமகள்’, ‘ருத்ரமாதேவி’, ’செக்க சிவந்த வானம்’ என தீபா பேசிய படங்களின் எண்ணிக்கை நீள்கிறது. சினேகா, சிம்ரன், அனுஷ்கா, நயன்தாரா போன்ற ஹீரோயின்களுக்கு தான் இவர் அதிகமாக குரல் கொடுத்திருக்கிறார்.
கணவருடன் மலைகளுக்கு ட்ரிப்...
மயக்கம் என்ன, இமைக்கா நொடிகள், கேம் ஓவர் போன்ற படங்களில் ஹீரோயினுக்குக் கொடுத்த குரலுக்காக விருதுகளையும் வென்றிருக்கிறார் தீபா. தற்போது குக்கிங்கில் படு பிஸியாக உள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”