Advertisment

அந்தகாரம் : அமானுஷ்ய-த்ரில்லர் பட ரசிகர்களுக்கு பிடிக்கும்!

திரில்லர், சயின்ஸ் பிக்ஷன், ஆத்மா, பேய், மாந்த்ரீகம் என பல விஷயங்களை ஒரே படத்தில் பார்க்க முடியும்.

author-image
WebDesk
New Update
Andhaghaaram movie review

Andhaghaaram movie review

Andhaghaaram Review: கைதி, மாஸ்டர் போன்ற பெரிய படங்களைத் தொடர்ந்து, நடிகர் அர்ஜுன் தாஸ் நடித்துள்ள படம் "அந்தகாரம்". இயக்குனர் அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர் விக்னராஜன் இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழிலும் தெலுங்கிலும் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஓர் அமானுஷ்ய - த்ரில்லர் படம்.

Advertisment

’திரும்பக் கொடுத்தலில் தான் வாழ்க்கையின் மகிழ்ச்சியே இருக்கிறது’ பிரகாஷ் ராஜ் பெருமிதம்!

அந்தகாரம் என்றால் இருள் என்று பொருள். படத்தில் பெரும்பாலான சீன்கள் இருளில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பார்வையற்ற நூலக பராமரிப்பாளர், சிக்கலான கடந்த கால மனநல மருத்துவர், மற்றும் மனச்சோர்வடைந்த கிரிக்கெட் வீரர் ஆகிய மூவரைச் சுற்றி படம் நகர்கிறது.

வினோத்தின் (அர்ஜுன் தாஸ்) டெலிஃபோன் பழுதாகிவிட வேறு ஒரு போனை வைக்கிறார்கள் பி.எஸ்.என்.எல்காரர்கள். ஆனால், அந்த போன் வந்ததிலிருந்து, யாரோ தொலைபேசியில் அழைத்து, அவரது ஆத்மாவை உடலிலிருந்து விடுவிக்கப் போவதாகச் சொல்கிறார்கள். பார்வையில்லாத இளைஞனான செல்வத்திற்கு (வினோத் கிஷன்) சிறுநீரகக் கோளாறு. சிறுநீரகத்தை மாற்றத் தேவைப்படும் ரூபாய்க்காக, ஒரு வீட்டிலிருக்கும் ஆவியை ஓட்டுவதற்கு ஒப்புக்கொள்கிறார் செல்வம். ஆனால், அது விபரீதமாக முடிகிறது. மனநல நிபுணரான டாக்டர் இந்திரனின் (குமார் நடராஜன்) குடும்பத்தைக் கொன்றுவிட்டு, அவரையும் சுட்டுவிடுகிறார் ஒரு நோயாளி. மீண்டும் வரும் இந்திரன், வேறு மாதிரி நபராகிவிடுகிறார். இந்த மூன்று பேரின் கதையும் மற்ற இருவரோடு தொடர்புடையதாக இருக்கிறது. இறுதியில் என்ன ஆனதே என்பது மீதிக் கதை.

திரில்லர், சயின்ஸ் பிக்ஷன், ஆத்மா, பேய், மாந்த்ரீகம் என பல விஷயங்களை ஒரே படத்தில் பார்க்க முடியும். மிகவும் குழப்பமான, சிக்கலான கதைக்களம். அதை மிக நேர்த்தியாகக் கொடுத்து அசரவைக்கிறார் இயக்குநர் விக்னராஜன். ஒவ்வொரு கதையின் காலமும் வெவ்வேறாக இருக்கிறது. இம்மாதிரி ஒரு திரைக்கதையை முயற்சிக்கவே மிகுந்த துணிச்சல் வேண்டும். அதைச் செய்திருக்கிறார் விக்னராஜன். நடுங்கி, பயந்து, பரிதவித்து, உதவி கேட்டு கெஞ்சி, காரணம் கண்டறிய ஓடிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்துக்கு அர்ஜுன் தாஸ் பக்கா ஃபிட். குரலில் குட்டி ரகுவரனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர், நடிப்பிலும் சளைத்தவன் இல்லை என நிரூபித்துள்ளார்.

'நான் மகான் அல்ல' படத்துக்குப் பிறகு சில படங்களில் வினோத் கிஷன் நடித்திருந்தாலும் இது மிகச் சிறந்த மறுவருகை என்று சொல்லலாம். குமார் நடராஜன் இருவிதமான பரிமாணங்களில் வருகிறார். குரல் வழி நடிப்பிலேயே மனிதர் அதகளம் செய்து அப்ளாஸ் அள்ளுகிறார். படத்தில் ஒளிப்பதிவு, பின்னணி இசை அனைத்துமே சிறப்பு.

இதெல்லாம் பாலா கிட்ட கேக்க வேண்டிய கேள்வியாச்சே…

ஆனால் மெதுவான திரைக்கதை நம்மை சோதிக்கிறது. அந்த தாமதத்திற்கு இடையில் வேறெந்த சுவாரஸ்யமும் இல்லாமல் இருப்பது, ரசிகர்களை இன்னும் படுத்துகிறது. அமானுஷ்ய - த்ரில்லர் பட ரசிகர்களுக்குப் பிடிக்கும். சாமானிய ரசிகனுக்கு கதை புரியவே சில முறை பார்க்க வேண்டும்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment