‘பல் போனால் சொல் போச்சு’ என்ற பழமொழி அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், பழமொழியை தெரிந்துக் கொண்டால் மட்டும் போதுமா? அதை அனுபவிக்க வேண்டாமா? பல் வரிசை அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் முக்கியம் வாய்ந்தது.
பளிச்சென்ற பற்களை பார்க்கும் போதும், அழகான பல் வரிசைக் கொண்டவர்களை பார்த்தாலும் நமக்கு சாதரணமாகவே பொறாமை வருவது இயல்பு. பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்களும் எட்டிப்பார்க்கும். பற்களை ஆரோக்கியமாக பாதுகாத்தால் நோய்களை தவிர்க்கலாம்.
சாப்பிடுவதில் தொடங்கி, மற்றவரை கவர்ந்து இழுப்பது வரை பற்களின் பயன்கள் ஏராளம். பற்சிதைவு, ஈறுகளில் வலி, போன்றவற்றை வராமல் எப்படி தடுக்கலாம்? வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பற்களை எப்படி பாதுகாக்கலாம் என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
1. நீண்ட நேரம் பற்களுக்கு இடையில் உணவு இருப்பதாலோ சரியாக பல் துலக்காததாலோ பல் சொத்தை ஏற்படும். இதற்கு தீர்வு டூத் ப்ரெஷ்ஷை மெதுவாக ஒவ்வொரு பல்லிலும் ஈரும், பல்லும் சந்திக்கும் இடத்தில் இருந்து துலக்க வேண்டும்.
2. கோபமாக இருக்கும் போது பல்லை கடிக்கக்கூடாது.
3. பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்து திறக்க முயற்சிக்க கூடாது. இதனால் பற்களுக்கு சேதம் ஏற்படுவதுடன் உதடுகளிலும் கீறல் அல்லது காயம் ஏற்படலாம்.
4. பல், வயிறு தொடர்பான பிரச்னைகளால் துர்நாற்றம் ஏற்படலாம். மவுத்வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது என்பது தற்காலிகமான தீர்வு.
5. தினசரி காலை மற்றும் இரவு வேளைகளில் இளஞ்சூடான நீருடன் கல்லுப்பு சேர்த்து வாய்க்கொப்பளிக்கவும்.
6. மது மற்றும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். டீ, காபி, குளிபானங்கள் குடித்தபின்னர் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
7.குடிக்கும் நீரில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பற்களில் கறை உண்டாகலாம்.
8. உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பிடவேண்டும்.
9.கடினமான பிரஷைத் தவிர்க்க வேண்டும். பிரஷ்ஷை அழுத்திப் பிடித்துப் பல் துலக்கக் கூடாது.
10. இயற்கையான நல்லெண்ணெயில் வாய் கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும்.