சர்க்கரை நோயாளிகள் கனவில் கூட இந்த உணவை உண்ணாதீர்கள்!

சாதாரணமாக தின்னும் தின்பண்டங்கள்கூட, இவர்களுக்கு, ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தி விடக்கூடும்.

சர்க்கரை நோய் என்றால், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். சர்க்கரைநோய் வருவதற்கு மிக முக்கியமான காரணம்,  உணவுப் பண்பாட்டில் நடக்கும் ஒழுங்கின்மை, மன அழுத்தம், உடல் உழைப்பு குறைவது.

சர்க்கரை பாதிப்புள்ளவர்கள், மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கிறார்களோ இல்லையோ, வாய்க்கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டியது, மிகவும் அவசியம். மற்றவர்கள் சாதாரணமாக தின்னும் தின்பண்டங்கள்கூட, இவர்களுக்கு, ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தி விடக்கூடும்.

அதிலும் குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட கூடாத சில உணவுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

1. கிழங்கு வகைகள்: 

உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு.

2. இறைச்சி : 

ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு.

3. கஞ்சி என்றால் சர்க்கரை ரத்தத்தில் கலக்கும் வேகம் அதிகமாகிவிடும். அதை கட்டாயமாக  தவிர்க்கவும்.

4. எண்ணெய் வகைகள்:

தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில் இவற்றி சமைத்த திண்பண்டங்கள் மற்றும் உணவுகள்

5. பலகாரங்கள்:

இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்தவை.

6. பால் வகைகள்:

எருமை பால், வெண்ணெய், வணஸ்பதி

7. வெள்ளைநிறத்தில் உள்ளவை யாவும், டயாபடிஸ்காரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். வெள்ளை பிரெட்டில் உள்ள குளுக்கோஸ், சர்க்கரையளவை, மோசமாக்கிவிடும்.

8. ப்ரைடு ரைஸ், ஃப்ரைடு நூடுல்ஸ் போன்ற மசாலா நிறைந்த சீன உணவுகளில் அதிக கொழுப்பு, அதிக கார்ப், அதிக சோடியம் மற்றும் அதிக கலோரி இருப்பதால், சர்க்கரை பாதிப்புள்ளவர்களுக்கு, இவை அதிக ஆபத்தை விளைவிக்கும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

×Close
×Close