Advertisment

12 நிமிஷத்துல சுகர் குறையும்... நீரிழிவு நோயாளிகள் இதை நோட் பண்ணுங்க!

சர்க்கரை நோய் உள்ளவர்களால் மருந்து மாத்திரைகள் இல்லாமலேயே உடலில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியும் என்றும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் மருத்துவர்கள் கூறுவது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
cycle ride

சைக்கிள் ஓட்டுவது நல்லது

சர்க்கரை நோய் வந்து விட்டாலே வாழ்க்கை முழுவதும் மாத்திரை மருந்துகள் சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். மாத்திரை,மருந்துகள் இல்லாமலேயே அதை குறைக்க முடியுமா என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. மாத்திரை மருந்துகள் இல்லாமல் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும் என்றும் அதற்கு சரியான உணவு மற்றும் உடற்பயிற்சிகளை ஆரம்ப கட்டத்திலேயே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

Advertisment

என்னென்ன உடற்பயிற்சிகள் செய்து சர்க்கரை அளவை குறைக்கலாம் என்னென்ன உணவுகள் சாப்பிட்டு சர்க்கரையை குறைக்க முடியும் என்றெல்லாம் இதில் பார்க்கலாம். 

ஹார்ட்வேர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட உடற்பயிற்சிகள் தான் இவை. இதில் முதலில் கூறுவது சைக்கிள் உடற்பயிற்சி.  சைக்கிள் ஓட்டுவது சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.  ஒரு நாளைக்கு 12 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது நல்லது. அந்த 12 நிமிடம் சைக்கிள் ஓட்டுவதால் உடலில் சர்க்கரை அளவு குறையும். அதேபோல இன்சுலின்கள் சுரக்கும் ஆனால் பாதிக்காது. கொழுப்புச் சத்து குறைய ஆரம்பிக்கும், இரத்த நாளங்களில் உள்ள வீக்கத்தையும் குறைக்கும்.

எல்லா வயதினருமே இந்த சைக்கிள் ஓட்டும் உடற்பயிற்சி செய்வது நல்லது. சைக்கிள் ஓட்ட முடியவில்லை என்றாலும் சைக்கிள் ஓட்டுவது போன்ற அசைவு தரக்கூடிய நிறைய உடற்பயிற்சி உபகரணங்கள் உண்டு. அதையும் வாங்கி பயன்படுத்தலாம்.

12 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது சர்க்கரை நோய் மட்டும் கிடையாது அன்றைய நாள் முழுதும் உடலை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவும். மிகவும் அதிக வயதானவர்கள் சைக்கிள் ஓட்ட முடியாது என்பதால் படுத்துக்கொண்டு பாதத்தை நீட்டி மடக்கி  உடற்பயிற்சி செய்ய வேண்டும். கால்களில் இருக்கும் தசைகள் சுருங்கி விரிய ஆரம்பிக்கும் போது ரத்தநாளங்களில்  விரிவடையும்போது ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

இந்த உடற்பயிற்சியை அமர்ந்து கொண்டும் செய்யலாம். அதாவது குனிந்து நிமிர்ந்து பாதத்தை தொட்டும் செய்யலாம். இதனால் இடுப்பு பகுதிக்கும் நல்லது நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். இதே மாதிரி உள்ளங்கையையும் கீழே மேலே என அசைக்கலாம்.  

சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுகள் என்னென்ன எடுத்துக்கொள்ள வேண்டும்  என்று பார்க்கலாம். டீ, காபி குடிப்பவர்களுக்கு சர்க்கரை, ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவும். எனவே ஒரு நாளைக்கு இரண்டு வேளை டீ, காபிகளை குடிக்கலாம்.  வைட்டமின் சி  அதிகம் உள்ள  ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி, ப்ரோக்கோலி மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ள காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். கேரட், கொய்யா, பூசணிக்காய், ஆப்பிள் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பாக முதன் முதலில் உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக பலத்தை போட்டு உடற்பயிற்சி செய்யக்கூடாது. மெதுவாக ஆரம்பிக்க வேண்டும். அதேபோல தண்ணீர் அவ்வப்போது குடிக்க வேண்டும்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ 

Diabetes exercise
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment