Advertisment

இனி இப்படி சாப்பிடுங்க: கடுமையான மாதவிடாய் வயிற்று வலி சீக்கரமா சரியாகும்

வயிற்று வலி என்பது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஒன்று. குறைந்த வலி முதல் அதிக வலி வரை ஏற்படலாம். வயிற்று வலி, இடுப்பு வலி, சில நேரங்களில் கால் வலி வரை ஏற்படலாம்.

author-image
WebDesk
New Update
saaa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வயிற்று  வலி என்பது மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஒன்று. குறைந்த வலி முதல் அதிக வலி வரை ஏற்படலாம். வயிற்று வலி, இடுப்பு வலி, சில நேரங்களில் கால் வலி வரை ஏற்படலாம்.

Advertisment

சூடான பானங்களான க்ரீன் டீ குடித்தால், நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். மேலும் அதிக சர்க்கரை உள்ள உணவுகள், குளிர் பானங்களை நாம் சாப்பிடக்கூடாது. இது போல சாலட் போல் செய்து சாப்பிடாமல், ரோஸ்ட் செய்த காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

அதுபோல பால் பொருட்களை நாம் குறைவாக பயன்படுத்தலாம். க்ரீன் டீ, சூடான தண்ணீர் குடிக்கலாம். இது நமக்கு இருக்கும் அசௌகரியத்தை குறைக்கும். க்ரீன் டீயில் ஆண்டி ஆக்ஸிடண்ட், வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளதால், இது வலி குறைய உதவும்.

குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதால், நமது ரத்த குழாய்கள் குறுகிவிடும். இதனால் வலி இன்னும் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளது.

பால் சார்ந்த பொருட்கள் வீக்கத்தை அதிகரிக்கலாம். இதுபோல நாம் காஃபைனை குறைவாக எடுத்துகொண்டால் மாதவிடாயின்போது பதற்றத்தை, அழுத்தத்தை குறைக்கும்.

எதை சாப்பிடலாம்?

பல்வேறு வகையான பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். இதில் உள்ள வைட்டமின்ஸ், மினரல்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட்  வீக்கத்தை குறைக்கும். வலியை குறைக்கும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாஷியம், வயிற்று உப்புதலை தடுக்கும்.

இது போல முழுதானிய வகைகள்: பிரவுன் ரைஸ், ஓட்ஸ், குயினோவா. இதில் அதிக நார்சத்து உள்ளது. இது ஜீரணத்தை அதிகரிக்கும். மாதவிடாய் வலியை கொடுக்கும், ஹார்மோன்களை இது சீராக்க உதவுகிறது.

அவக்கடோ, நட்ஸ், விதைகளை நாம் சாப்பிட வேண்டும். இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு சத்து வலியை குறைக்கும். ஓமேகா 3 பேட்டி ஆசிட், பேட்டி மூன்கள், பிளாக்ஸ் விதைகள்  வீக்கத்திற்கு எதிரான பண்புகள் உள்ளது. இவை வலியை குறைக்கும்.

இதுபோல இஞ்சி, மஞ்சளை நம் உணவில் சேர்த்துக்கொண்டால், மாதவிடாய் நேரத்தின் அசௌகரியம் குறையும்.

கால்சியம் அதிகம் உள்ள பொருட்கள் தாவரவகை பால் மற்றும் கீரை வகைகளை சாப்பிட வேண்டும்.

மெக்னிஷியம் அதிகம் உள்ள பாதம், கீரை, டார்க் சாக்லேட் ஆகியவை நமது தசைகளை ஓய்வாக இருக்கச் செய்யும். வலியை குறைக்கும்.

அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இது வயிற்று உப்புதலை சரி செய்யும். மேலும் வலியை குறைக்கும். இதுபோல் மிளகுக்கீரை அல்லது கெமோமில் டீயை நாம் குடிக்கலாம்.

Read in English

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment