scorecardresearch

எண்ணையே இல்லாமல் டேஸ்டி டின்னர்… இந்த 3 ரெசிபீஸ் ட்ரை பண்ணுங்க!

Zero Oil Indian Veg recipes in tamil: உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலையுடனும் விழிப்புடனும் இருந்தால், உங்களுக்கு குறைந்த கொழுப்பு மற்றும் சுவையான உணவு ஒன்று தேவை.

Dinner Recipes in tamil: best 3 Quick And Easy Zero-Oil dinners tamil

Dinner Recipes in tamil: எண்ணெயில் சமைக்கப்படும் பெரும்பாலான உணவுகளில் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் பாதுகாப்பு, சேர்க்கைகள், செயற்கை ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை உள்ளன. இவை அனைத்தும் நாம் பயன்படுத்தும் தாவர எண்ணெய்களில் இருந்து வருகின்றன.

உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி நீங்கள் கவலையுடனும் விழிப்புடனும் இருந்தால், உங்களுக்கு குறைந்த கொழுப்பு மற்றும் சுவையான உணவு ஒன்று தேவை. இவை அனைத்தையும் நீங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஜீரோ-எண்ணெய் ரெசிபிகளில் இருந்து பெறலாம். அவை செய்ய எளிதானவை மற்றும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.

ஜீரோ-எண்ணெய் சமையல் – ஆரோக்கியமான இரவு உணவு

சப்பாத்தி ரோல்ஸ் – Chapati Rolls

நாம் செய்யக்கூடிய சிறந்த திருப்திகரமான சமையல் குறிப்புகளில் இதுவும் ஒன்றாகும். சப்பாத்தி ரோல்ஸ் காய்கறிகளின் நன்மைகள் மற்றும் உங்களுக்கு பிடித்த சாஸ்கள் நிறைந்தவை. இந்த சுவையான ரெசிபியை செய்ய முதலில் சப்பாத்திக்கான மாவு செய்ய வேண்டும்.

அதற்கு, 1 கப் மைதா, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் 1/2 எலுமிச்சை சாறு ஆகிய்வற்றைக்கொண்டு மாவாக பிசையவும்.

பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் ஒரு பருத்தி துணியால் மூடி வைக்கவும்.

பின்னர் மாவிலிருந்து சிறிய உருண்டைகளை உருவாக்கி, ஒவ்வொன்றையும் ஒரு ரொட்டியாக உருட்டவும்.

தொடர்ந்து தோசை கல்லில் ஒவ்வொரு ரொட்டியையும் இருபுறமும் மிதமான தீயில் இட்டு எடுக்கவும்.

அதன் பின்னர், அதில் சேர்க்கப்படும் மசாலா தயார் செய்ய, ஒரு கடாயை எடுத்து 1 சிறிய நறுக்கிய வெங்காயம், 1/2 தேக்கரண்டி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு சிவப்பு மிளகாய் தூள், உப்பு மற்றும் மிளகு சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.

பின்னர் 1 துண்டுகளாக்கப்பட்ட கேரட், 150 கிராம் நறுக்கிய பீன்ஸ், 1/2 கப் நறுக்கிய கேப்சிகம் சேர்த்து மேலும் சிறிது சமைக்கவும்.

அதன் பிறகு, 4 தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்த்து மேலும் 5 முதல் 7 நிமிடங்கள் சமைக்கவும்.

இப்போது இந்த மசாலாவை ரொட்டியுடன் ஸ்டஃபிங் செய்து உருட்டவும்.

பிறகு ரோலைப் பிடிக்க அதில் ஒரு டூத்பிக் ஒட்டவும். அடுத்து, அவற்றை ஒரு பேக்கிங் தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வரை சுட வேண்டும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த சப்பாத்தி ரோல்ஸ் தயாராக இருக்கும். அவற்றை இரவு உணவாக ருசிக்கவும்.

வெஜிடபிள் பான்கேக் – Vegetable Pancake

நீங்கள் வீட்டில் எளிதாக தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான வெஜ் பான்கேக்கை விட சிறந்தது எதுவுமில்லை. இந்த சுவையான பான்கேக் சமைக்க, முதலில், 1 உருளைக்கிழங்கு மற்றும் 1 கேரட் எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டவும்.

பிறகு நான்-ஸ்டிக் பான் எடுத்து அதில் காய்கறிகளை உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் உங்கள் சுவைக்கு ஏற்ப சேர்க்கவும்.

கடாயை மூடி சிறு தீயில் வேக வைக்கவும். முடிந்ததும் 1 தேக்கரண்டி தக்காளி சாஸ் சேர்க்கவும்.

பான்கேக் மாவைப் பயன்படுத்தி பான்கேக் செய்த பிறகு அவற்றில் வெஜிடபிளை நிரப்பவும்.

ஒரு கேக்கில் பரப்பி, இரண்டாவது கேக்குடன் மூடி வைக்கவும். மீண்டும், அதை நிரப்பி, மூன்றாவது கேக்குடன் மூடி வைக்கவும்.

பின்னர் தக்காளி துண்டுகளால் அலங்கரித்து சுவையான உணவை அனுபவிக்கவும்.

ரைஸ் மூங் தால் இட்லி – Rice Moong Dal Idli

இட்லி என்பது நாம் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய உணவாகும். இந்த சுவாரஸ்யமான ரைஸ் மூங் தால் இட்லி (அரிசி பாசிப்பருப்பு இட்லி) உங்கள் பசியை திருப்திப்படுத்தவும், வித்தியாசமான உணவுவை முயற்சிக்கும் விதமாகவும் உள்ளது.

இதற்கான செய்முறையைத் தயாரிக்க, 1/2 கப் அரிசி, 1/2 கப் பாசிப் பருப்பு மற்றும் 2 சிட்டிகை வெந்தய விதைகளை 5 முதல் 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

அனைத்து பொருட்களையும் நன்கு அலசி வடிகட்டவும். பின்னர், அவற்றை அரைத்து, மற்றொரு 8 மணிநேரம் அல்லது ஒரே இரவில் ஊற விட்டு விடுங்கள்.

இட்லி மாவில் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்தும், சுவைக்க உப்பு சேர்த்தும் நன்கு கலக்கவும்.

இட்லி ஸ்டாண்டில் மாவை ஊற்றி வேகவைக்கவும்.

இட்லிகள் தயாரான பிறகு, தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த சட்னியுடன் சூடாக பரிமாறி ருசிக்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Dinner recipes in tamil best 3 quick and easy zero oil dinners tamil

Best of Express