Advertisment

1000 ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல்கள் வந்தாலும் மவுசு குறையாத ரங்கநாதன் தெரு!

தீபாவளி கொண்டாடத்திற்கு தயாராகி வரும் சென்னை பெருநகரம்..

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Diwali 2019 Ranganathan Usman Road T Nagar Shopping

Diwali 2019 Ranganathan Usman Road T Nagar Shopping : தீபாவளி என்றால் புதுத்துணி, பட்டாசுகள், அறுசுவை உணவு, இனிப்பு வகைகள் தான். சென்னையில் தங்கி படிக்கும், வேலை பார்க்கும் அனைவரும் தீபாவளிக்கு வீட்டுக்கு செல்லும் போது உணவு வகைகள் வாங்கிக் கொண்டு போகிறார்களோ இல்லையோ வீட்டில் உள்ள அனைவருக்கும் சூப்பரா ட்ரெஸ் வாங்கிட்டு போறாங்க. சேலையோ, வேஷ்டி - சட்டையோ, சுடிதாரோ, பேண்ட்-ஷர்ட்டோ என்னதான் ஆயிரம் ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல்கள் வந்தாலும் என்றும் ரங்கநாதன் ஸ்ட்ரீட்டுக்கும், உஸ்மான் ரோட்டுக்குமான மதிப்புகள் குறைவதில்லை.

Advertisment

Diwali 2019 Ranganathan Usman Road T Nagar Shopping

மிக குறைந்த விலையில், பாக்கெட்டில் ஓட்டை விழாத வகையில் துணிகளை வாங்க அனைவரும் தியாகராய நகரில் அமைந்திருக்கும் கடைகளுக்கு செல்வது வழக்கம். போத்தீஸ் முதல் சரவணா ஸ்டோர்ஸ் வரையில் துணிக்கடைகளும், ஜீ.ஆர்.டி போன்ற தங்க நகைக்கடைகளும் அங்கு இருக்கிறது. மேலும் சின்ன சின்ன கடைகள் நிறைய ரங்கநாதன் தெருவில் நூற்றுக் கணக்கில் இருக்கிறது. இங்கு வந்து உடைகளை வாங்க மக்கள் தினமும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

Diwali 2019 Ranganathan Usman Road T Nagar Shopping

நிதி பற்றாக்குறை, ஜி.எஸ்.டி., உற்பத்தி நிறுத்தம் என பல்வேறு பொருளாதார பின்னடைவுகளை ஒட்டுமொத்தமாக அனைவரும் சந்தித்திருக்கும் இந்த நேரத்திலும் மக்கள் பெருந்திரளாக கடைகளில் வந்து தங்களுக்கு தேவையான உடைகளை வாங்கிச் செல்கின்றனர். உடைகள் மட்டுமின்றி, செருப்புகள், நகைகள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் என அனைத்தும் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்பதால் அவர்கள் அனைவரின் ஒட்டுமொத்த பார்வையும் டி.நகரில் விழுகிறது.

மேலும் படிக்க : பசுமை பட்டாசுகள் உத்தரவு : குழப்பத்தில் சிவகாசி தொழிற்சாலைகள்…

Diwali 2019 Ranganathan Usman Road T Nagar Shopping

இந்த கூட்டத்தை சாதகமா பயன்படுத்திக்கிட்டு பிக்பாக்கெட் போன்ற செயல்களில் நிறைய பேர் ஈடுபட்டு வருவதும் வாடிக்கையான ஒன்றாக அமைந்துவிட்டது. இதையெல்லாம் தடுக்க ஆங்காங்கே காவல்துறையினர் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் எச்சரிக்கைகளை கூறி வருகின்றனர். என்னதான் வெளியூர்வாசிகளால் சென்னை தெருக்கள் இந்த இரண்டு வாரங்களுக்கு நிறைந்திருந்தாலும், தீபாவளியன்றும் தீபாவளிக்கு அடுத்த நாளும் மொத்த சென்னையே காத்து வாங்கும் நிலையில் தான் இருக்கும்.

Diwali T Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment