Diwali Festival: தீபாவளி என்றதுமே நமக்கு புத்தாடைகளும், இனிப்பு உள்ளிட்ட திண்பண்டங்களும், பட்டாசுகளும் தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கான காரணங்களாக நமது புராணங்கள் நிறைய விஷயங்களை சொல்கின்றன.
தீபாவளி வரலாறு
ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.
Diwali : பட்ஜெட் ஸ்வீட்.. ரவா லட்டு டேஸ்ட் அண்ட் பெஸ்ட்!
தீய சக்தியாக இருந்த நரகாசூரனை, வீழ்த்தி வெற்றிப் பெற்றார் கிருஷ்ணன். ஆனால் அதேசமயம் நரகாசூரனின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்கிறார். அதனால் தீபாவளி தோன்றியதாகவும் புராணக் கதைகள் சொல்கின்றன. நரகாசூரனை வெற்றிக் கொண்ட கிருஷ்ணன், வெற்றி வீரனாக தனது சகோதரியின் வீ்ட்டிற்கு செல்கிறார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பும், இனிப்பும் வழங்கப்படுகிறது. இதனால் தான், தீபாவளியன்று அனைவரும் நண்பர்கள், உறவினர்களிடையே இனிப்புகள் வழங்கும் பழக்கம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. தீபாவளி இந்தியாவில் மட்டுமல்ல, நமது அண்டை நாடுகளான வங்காளதேசம், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெயர்களும் கொண்டாடும் முறைகளிலும் மாற்றம் உள்ளது.
இருளில் இருப்பவனுக்குத் தான் வெளிச்சத்தின் அருமை புரியும். அப்படி மனதில் இருக்கும் இருளைப் போக்கி, வெளிச்சத்தை பரப்பும் தீபாவளி, நமக்கு நிறைய பாஸிட்டிவ் எனெர்ஜிகளை தருகிறது.
தமிழகத்தில் தீபாவளி
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து, இல்லத்தின் மூத்த உறுப்பினரிடம் ஆசிர்வாதம் வாங்குவார்கள். அந்த மூத்தவர் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தலையில் நல்லெண்ணெய் தொட்டு வைப்பார். பின் உடல் முழுவதும் எண்ணெய் பூசிக் கொண்டு, வெந்நீரில் குளிப்பார்கள். பின்னர் புத்தாடை உடுத்தி, பட்டாசுகளை வெடித்து மகிழ்வர். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். வீட்டில் இனிப்புக்கள் நிறைய செய்து உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுக்கு கொடுத்து மகிழ்வர். இனிப்பு மற்றும் எண்ணெய் பொருட்களை சாப்பிடுவதால், செரிமானக் கோளாறு ஏற்படும். இதை தவிர்க்க சாப்பாட்டிற்கு முன்பே தீபாவளி லேகியத்தை சாப்பிடுவார்கள். இந்த நாளைக் கொண்டாட, உறவினர்கள் வீட்டிற்கு சென்று வருவார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”