4 பொருட்கள் போதும்... தீபாவளிக்கு இப்படி ஈஸியா மைசூர் பாக் செய்து பாருங்க!
Mysorepa seivathu eappadi in tamil: தித்திக்கும் இனிப்பை கொண்டுள்ள நெய் மைசூர் பாக்கை நம்முடைய வீட்டிலே தயார் செய்வதில் நம்மில் பலர் சிரமம் கொள்கிறார்கள். ஆனால், நெய் மைசூர் பாக் செய்வது மிகவும் ஈஸியானதாகும்
Mysorepa seivathu eappadi in tamil: தித்திக்கும் இனிப்பை கொண்டுள்ள நெய் மைசூர் பாக்கை நம்முடைய வீட்டிலே தயார் செய்வதில் நம்மில் பலர் சிரமம் கொள்கிறார்கள். ஆனால், நெய் மைசூர் பாக் செய்வது மிகவும் ஈஸியானதாகும்
Mysore Pak Recipe at Home in tamil: தீபாவளி என்றால் நம் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது பட்டாசு, புத்தாடைகள் மற்றும் சுவைமிகுந்த இனிப்பு வகைகள். இந்த இனிப்பு வகைளில் முக்கிய இடத்தை தக்கவைத்திருக்கிறது மைசூர் பாக். இவற்றில் சில வகைகள் உள்ள நிலையில், அதில் நெய் மைசூர் பாக் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது.
Advertisment
தித்திக்கும் இனிப்பை கொண்டுள்ள நெய் மைசூர் பாக்கை நம்முடைய வீட்டிலே தயார் செய்வதில் நம்மில் பலர் சிரமம் கொள்கிறார்கள். ஆனால், நெய் மைசூர் பாக் செய்வது மிகவும் ஈஸியானதாகும். இப்போது அவற்றுக்கான செய்முறையை பார்க்கலாம்.
நெய் மைசூர் பாக் செய்யத் தேவையான பொருட்கள்
Advertisment
Advertisements
கடலை மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
எண்ணெய் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
செய்முறை
நெய் மைசூர் பாக் தயார் செய்ய முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் சர்க்கரையை இட்டு பாகாக மாற்றவும்.
இதற்கிடையில், கப்பில் உள்ள கடலை மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மிக்ஸ் செய்துகொள்ளவும்.
சர்க்கரை பாகு தயாரானதும் அவற்றுடன் முன்னர் மிக்ஸ் செய்துள்ள கடலை மாவை சேர்த்து கலக்கவும்.
தொடர்ந்து சிறிதளவு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் சூடு செய்து கொள்ளவும்.
பாகு மற்றும் மாவை பாத்திரத்தில் தொடர்ந்து கிளறும் போது கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்துக்கொள்ளவும்
மாவு நன்கு கெட்டியான பிறகு ஒரு சதுரமான பாத்திரத்தில் இடவும். அவை நன்கு ஆறிய பின்னர் ஒரு கத்தியால் சதுரமாக வெட்டவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவைமிகுந்த தீபாவளி இனிப்பான "நெய் மைசூர் பாக்" தயாராக இருக்கும். அவற்றை உங்கள் உற்றார் - உறவினர்களோடு பகிர்ந்துண்டு மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“