எலும்பு அடர்த்தி... 35 வயதை தாண்டுனா இதில் கவனம் மக்களே; இந்த உணவு முக்கியம்: டாக்டர் அருண் கண்ணன்
எலும்புகள் வலிமையாக இருக்க வேண்டிய அவசியம் குறித்தும், அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் மருத்துவர் அருண் கண்ணன் தெரிவித்துள்ளார். இதில் எலும்புகள் தொடர்பான தகவல்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
நம் உடலின் தூணாக செயல்படுவது எலும்புகள் தான். எனவே, எலும்பை அடர்த்தியாக பராமரிப்பது, நம் மொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். சராசரியாக 30 வயது வரை எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து காணப்படும்.
Advertisment
எனவே, 35 வயதுக்கு மேல் இந்த எலும்பு அடர்த்தி குறையத் தொடங்கும். இதன் மூலம் எலும்புகளை வலிமையாக வைத்திருக்க கால்சியம் சத்து அவசியம். பால் பொருட்கள், ராகி, ப்ரோக்கொலி உள்ளிட்ட பச்சை காய்கறிகள் சாப்பிடலாம். அசைவ உணவுகளை பொறுத்த வரை சிக்கன், மீன், இறால், முட்டை போன்றவற்றை சாப்பிடலாம்.
ஆனால், கால்சியம் சத்து மட்டுமே இதற்கு போதுமானது இல்லை. கால்சியம் சத்துகள் எலும்புக்கு செல்ல வேண்டுமென்றால் வைட்டமின் டி அவசியம் என மருத்துவர் அருண் கண்ணன் கூறுகிறார். போதுமான அளவு சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி கிடைத்து விடும் என அவர் அறிவுறுத்துகிறார்.
இதேபோல் புரதச் சத்தும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. கொண்டைகடலைகள், ராஜ்மா, பால் பொருட்களில் இருந்து புரதம் கிடைத்து விடும். சிக்கன், மீன், முட்டை ஆகிய அசைவ உணவுகளிலும் புரதம் ஏராளமாக இருக்கிறது.
Advertisment
Advertisement
இவை அனைத்தையும் சாப்பிட்டாலும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் சரியான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். Weight Bearing Exercise மேற்கொள்வதன் மூலம் எலும்புகளுக்கு வலிமை கிடைக்கும் என மருத்துவர் அருண் கண்ணன் தெரிவித்துள்ளார். அதன்படி, நடைபயிற்சி, புஷ் அப்ஸ், ஸ்குவாட்ஸ், ஸ்கிப்பிங் ஆகியவற்றை தினசரி 20 நிமிடங்களாவது மேற்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.