இதை 3 நாட்களுக்கு மேல் ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க: டாக்டர் அருண் குமார் அட்வைஸ்
எந்த வகையான உணவு பொருட்களை, எவ்வளவு நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆப்பிளை இரண்டு வாரங்கள் கூட ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.
எந்த வகையான உணவு பொருட்களை, எவ்வளவு நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆப்பிளை இரண்டு வாரங்கள் கூட ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.
இன்றைய சூழலில் பலரது வீட்டிலும் அத்தியாவசிய பொருளாக ஃப்ரிட்ஜ் மாறி விட்டது. தற்போது, ஆண் மற்றும் பெண் என இருவரும் வேலைக்கு சென்று பொருள் ஈட்டும் நிலையில் இருக்கின்றனர். அவ்வாறு வெளியே சென்று வேலை பார்ப்பவர்களுக்கு வீட்டில் சமையல் தான் பெரும் சவாலாக இருக்கும்.
Advertisment
அலுவலக வேலையையும் முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து சமையலையும் பார்ப்பது சிரமமாக இருக்கும். பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் இது கூடுதல் சுமையாக தான் இருக்கும். அதிலும், வீட்டிற்கு தேவையான உணவு வகைகளை தினசரி வாங்கி வருவது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது.
இந்த வேலையை எளிதாக்குவதற்காக நிறைய பேர் வீட்டில் ஃப்ரிட்ஜ் இருக்கிறது. ஆனாலும், இந்த ஃப்ரிட்ஜை அனைவரும் சரியாக தான் பயன்படுத்துகிறீர்களா என்பது கேள்விகுறியாக இருக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு உணவு வகைகளையும் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் தான் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும். அதன்படி எந்த உணவுகளை எவ்வளவு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, நாம் வாங்கி வந்ததில் இருந்து முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து விதமான காய்கறிகளையும் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் எனவும், இதனால் சத்துகள் குறையாது என்றும் மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். இதேபோல், கீரை வகைகளை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Advertisment
Advertisements
இது தவிர பழங்களை மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். எனினும், ஆப்பிளை இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் பரிந்துரைக்கிறார். பால் பொருட்களை அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு மேல் ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.
அசைவ உணவுகளையும் மூன்று நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக, சமைத்த உணவுகளை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது. எனவே, இது போன்ற குறிப்பிட்ட கால அளவு வரை மட்டுமே உணவு பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
நன்றி - Doctor Arunkumar Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.