டாக்டர் அருண்குமார் 6-6-6 என்ற முறையில் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். இது ஒரு எளிய டிப்ஸ் என்றும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் தெரிவிக்கிறார்.
Advertisment
இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்கில் உள்ள 6-6-6 நடைபயிற்சி முறை குறித்து டாக்டர் அருண்குமார் கூறுகையில், “இன்ஸ்டாகிராமில் தற்போது 6-6-6 என்ற ஒன்று டிரெண்டிங்கில் உள்ளது. அது என்ன 6-6-6 என்று தேடினால், 3 விதமான விளக்கங்களைக் கூறுகிறார்கள்.
அதாவது 6-6-6 என்பதற்கான முதல் விளக்கம், “தினமும் 60 நிமிடம் நடைபயிற்சி செய்ய வேண்டும். 60 நிமிடம் நடை பயிற்சிக்கு முன்னாடியும் பின்னாடியும் 6 நிமிடம் வார்ம் அப் செய்ய வேண்டும். வாரத்துக்கு 6 நாள் இந்த நடைபயிற்சியை செய்ய வேண்டும்.
6-6-6 என்பதற்கான இரண்டாவது விளக்கம், “வாரத்துக்கு 6 நாள் நடக்க வேண்டும், ஒரு நாளைக்கு 6 கி.மீ நடக்க வேண்டும், ஒரு மணி நேரத்துக்கு 6 கி.மீ வேகத்தில் நடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
Advertisment
Advertisements
6-6-6 என்பதற்கான மூன்றாவது விளக்கம், “ஒரு நாளைக்கு 6 முறை நடக்க வேண்டும், ஒவ்வொரு முறையும் 6 நிமிடம் நடக்க வேண்டும், அப்புறம், இதே மாதிரி வாரத்துக்கு 6 நாள் நடக்க வேண்டும்.
6-6-6 என்பதற்கான மூன்று விளக்கங்களுமே நடைபயிற்சியை வலியுறுத்துகின்றன. நடைபயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கும் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதற்கும் அவசியம். ஆனால், இதில் மூன்றாவது விளக்கம் பொருத்தமானதாகவும் எளிதாகவும் இருக்கிறது. இதை ஃபாலோ செய்து, இந்த 6-6-6 நடைபயிற்சியை செய்யலாம்” என்று டாக்டர் அருண்குமார் ஆலோசனை கூறுகிறார்.
இந்த முறை உடலில் கலோரிகள் எரிக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடலை ஃபிட்டாக வைத்திருக்கவும் உதவக்கூடும். இது ஒரு எளிமையான முறை என்பதால், யார் வேண்டுமானாலும் இதை பின்பற்றலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.