Advertisment

ஒரு வாரத்தில் எத்தனை முறை அசைவம் சாப்பிட வேண்டும்? டாக்டர் அருண் குமார் அட்வைஸ்

ஒரு வாரத்தில் எத்தனை முறை அசைவம் சாப்பிட வேண்டும் என்றும், எந்த அளவிற்கு அசைவம் சாப்பிடலாம் என்றும் மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இதில் இருந்து கிடைக்கும் சத்துகள் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Non veg foods

அசைவ உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு ஒரு வாரத்தில் எத்தனை முறை அவற்றை சாப்பிடலாம் என்றும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்றும் சந்தேகம் இருக்கும். இதற்கான விளக்கத்தை மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

நம் உடலுக்கு தேவைப்படும் சத்துகளில் பிரதானமாக இருப்பது புரதம். இந்த புரதச் சத்து அசைவ உணவுகளில் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் ஒரு கிலோ உடல் எடைக்கு 0.8 கிராம் அளவிற்கு புரதம், ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக 60 கிலோ உடல் எடை கொண்டவர்கள் குறைந்தபட்சம் 48 கிராம் புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த புரதத்தில் 9 வகையான அமினோ ஆசிட்கள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். இவை அனைத்தும் அசைவ உணவுகளான முட்டை, இறைச்சி வகைகள், மீன் வகைகள் மற்றும் பால் பொருட்களில் இருந்து எளிதாக கிடைத்து விடுகின்றன. ஆனால், தானியங்கள் மற்றும் பயிர் வகைகள் சாப்பிடுபவர்களுக்கு இவை அனைத்தும் ஒரே உணவில் இருந்து கிடைப்பது இல்லை என மருத்துவர் அருண் குமார் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கு தேவையான புரதம் மூன்று பங்கு தானியங்களில் இருந்து, ஒரு பங்கு பயிர் வகைகளில் இருந்து கிடைக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். இது தவிர அசைவம் சாப்பிடுபவர்கள் ஒரு வாரத்திற்கு 700 முதல் 900 கிராம் வரை அவற்றை சாப்பிடலாம் என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்.

Advertisment
Advertisement

இதனடிப்பையில், ஒரு நாளைக்கு 300 கிராம் சாப்பிட்டால் வாரத்திற்கு மூன்று முறை அசைவம் சாப்பிடலாம் என்றும், ஒரு நாளைக்கு சுமார் 150 கிராம் அளவில் சாப்பிடுபவர்களாக இருந்தால் தினசரி கூட அசைவம் சாப்பிடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Benefits of eating fish Boiled eggs and its health benefits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment