சர்க்கரை நோயாளிகளுக்கு நடைபயிற்சி மட்டும் போதுமா? உண்மையை விளக்கும் டாக்டர் அருண் குமார்!
தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியுமா என்று மருத்துவர் அருண் குமார் விளக்கம் அளித்துள்ளார். இதற்கான அறிவியல்பூர்வ ஆதாரங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகள் அனைவரும் கட்டாயம் தினசரி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பார்கள். ஆனால், இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த நடைபயிற்சி மட்டும் போதுமானதா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். அதற்கான விளக்கத்தை மருத்துவர் அருண் குமார் கூறியுள்ளார்.
Advertisment
அதனடிப்படையில், நடைபயிற்சி மட்டும் இன்றி சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேறு சில பயிற்சிகள் இருப்பதாக மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள் நம் ஊரில் அதிகபட்சமாக மேற்கொள்ளும் உடற்பயிற்சி வாக்கிங் தான். எனினும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த நடைபயிற்சி சிறந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
இது இரண்டு விதத்தில் உதவி செய்கிறது. சாப்பிட்ட உடன் சர்க்கரை அளவு அதிகமாவதை குறைப்பதற்கு நடைபயிற்சி உதவி செய்கிறது. குறிப்பாக, சாப்பிட்ட பின்னர் சுமார் அரை மணி நேரம் கழித்து 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம். இது சாப்பிட்டதும் உயரக் கூடிய சர்க்கரை அளவை குறைக்கிறது. அது மட்டுமின்றி பொதுவாகவே, காலை அல்லது மாலையில் நடைபயிற்சி செய்யும் போது இன்சுலின் எதிர்ப்பு தன்மை குறைகிறது என்று மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்.
ஆனால், இது மட்டுமே சர்க்கரை நோயாளிகளுக்கு போதுமானதாக இருக்காது. அந்த வகையில் தசை கூட்டும் உடற்பயிற்சியை சர்க்கரை நோயாளிகள் மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் அருண் குமார் பரிந்துரைக்கிறார். இவை, சாதாரணமான நேரத்திலும் சர்க்கரை அளவை குறைக்க உதவி செய்கிறது. தசைகள் அதிகமாக இருந்தால் இன்சுலின் எதிர்ப்புத்தன்மை குறையும். இதனால், வேலை செய்யாமல் இருக்கும் போதே சர்க்கரை அளவை அதிகரிக்க விடாமல், தசைகள் அதனை எடுத்துக் கொள்கின்றன.
Advertisment
Advertisements
எனவே, நடைபயிற்சியை போலவே தசைகளை கூட்டும் பயிற்சியும் முக்கியம் என்று மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். வாரத்திற்கு மூன்று முறையாவது தசை கூட்டும் பயிற்சியை மேற்கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
நன்றி - Doctor Arunkumar Youtuve Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.