தூக்கமின்மை? கேன்சர் அபாயம் இருக்கு: டாக்டர் சொக்கலிங்கம்
தூக்கம் என்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்று மருத்துவர் சொக்கலிங்கம் அறிவுறுத்துகிறார். மேலும், தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் பட்டியலிடுகிறார்.
தூக்கம் என்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்று மருத்துவர் சொக்கலிங்கம் அறிவுறுத்துகிறார். மேலும், தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் பட்டியலிடுகிறார்.
ஒரு நபரின் வாழ்க்கையில் தூக்கம் என்பது இன்றியமையாதது. அந்த வகையில், சராசரியாக 7 முதல் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும் என்று மருத்துவர் சொக்கலிங்கம் கூறுகிறார்.
2/6
ஓய்வு இன்றி தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டு இருக்கும் உடல் உறுப்புகளை சீராக வைத்திருப்பதற்கு நாம் அவசியம் தூங்க வேண்டும் என்று மருத்துவர் சொக்கலிங்கம் அறிவுறுத்துகிறார். அந்த வகையில், சரியாக தூங்காமல் இருந்தால் பல்வேறு பாதிப்புகள் வரும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.
3/6
நம் உடலில் சராசரியாக 40 ட்ரில்லியன் செல்கள் இருக்கிறது என்று மருத்துவர் சொக்கலிங்கம் கூறுகிறார். இந்த செல்கள் அனைத்தும் புதுப்பித்துக் கொள்வதற்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும்.
Advertisment
4/6
அதற்கு நேரம் கொடுக்காமல் தூக்கத்தை கடத்தினால் உடல் உபாதைகள் வரக் கூடும் என்று மருத்துவர் சொக்கலிங்கம் எச்சரிக்கை விடுக்கிறார். இது மிகவும் சிக்கலான நோய்களுக்கும் வழிவகுக்கக் கூடும்.
5/6
உதாரணத்திற்கு, சரியாக தூங்காமல் இருக்கும் போது குறிப்பிட்ட செல்கள் புதுப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு இல்லாமல் அவை கேன்சர் செல்களாக மாறும் அபாயம் இருப்பதாக மருத்துவர் சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
6/6
எனவே, இது போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு சரியான முறையில் தூக்க சுழற்சியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.