சூரியகாந்தி விதைகள் உடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கக் கூடியது என மருத்துவர் கார்த்தியேகன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, புகைப்பழக்கம் இருப்பவர்கள் அதில் இருந்து விடுபடுவதற்கு இந்த விதைகள் உதவி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சருமத்தில் ஈரப்பதம் பராமரிக்கப்பட்டால் தான் நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதன்படி, சருமத்தை பராமரிக்க செலினியம் என்ற தாதுபொருள் மிக முக்கிய தேவையாக இருக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று வேளை சூரியகாந்தி விதைகளை 5 கிராம் சாப்பிட்டால், அதன் மூலம் நமக்கு தேவையான செலிமியம் சத்து கிடைத்து விடும் என்று மருத்துவர் கார்த்தியேகன் குறிப்பிட்டுள்ளார்.
இருதயம் ஆரோக்கியமாக இயங்க வேண்டுமென்றால், கொழுப்புகள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன்படி, இருதய நோய்களை தடுக்க ஆரோக்கியமான கொழுப்புகள் நம் உடலுக்கு தேவைப்படும். அதற்கான ஆரோக்கிய கொழுப்புகள் சூரியகாந்தி விதைகளில் இருக்கிறது.
கண்பார்வை சீராக இயங்குவதற்கு, உடலில் எதிர்ப்பு சக்தி சரியான அளவில் இருப்பதற்கு, நரம்புகள் உறுதியாக இருப்பதற்கு வைட்டமின் இ மிக முக்கிய தேவையாக இருக்கிறது. சூரியகாந்தி விதையில் வைட்டமின் இ 234 சதவீதம் இருக்கிறது. எனவே, வைட்டமின் இ குறைபாடு இருப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.