டின்னருக்கு பிறகு இரவில் ஒரு கிளாஸ் தண்ணீர்; 6000 - 8000 ஸ்டெப்ஸ் நடை... சுகர், பி.பி என்னாகும்னு பாருங்க!
இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மருத்துவர் கார்த்திகேயன் பரிந்துரைத்துள்ளார். அவற்றின் நன்மைகளை தற்போது பார்க்கலாம்.
நடைபயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள், எவ்வாறு நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனற வழிமுறைகளை மருத்துவர் கார்த்திகேயன் விவரித்துள்ளார்.
Advertisment
வயதானவர்கள் தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என மருத்துவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரத்த அழுத்தம், மன அழுத்தம் ஆகியவையும் குறைந்து கை, கால்கள் வலிமையாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், காலை நேரத்தில் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் தும்மல், ஆஸ்துமா பிரச்சனைகளும் உடற்பயிற்சி மூலம் குறையும் எனக் கூறப்படுகிறது. அதன்படி, இரவு நேரத்தில் உணவு சாப்பிட்ட பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து விட்டு, சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை இடைவிடாமல் நடைபயிற்சி செய்வது நன்மை அளிக்கும் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.
ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்கள் கூகுள் ஃபிட் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியின் மூலமாக நாம் நடக்கும் ஸ்டெப் கண்காணிக்கப்படும். அந்த வகையில் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisment
Advertisement
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.